ஜுலை,29- சென்னை அருகே  இன்று அதிகாலை, பேருந்து ஒன்று லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் 22 பேர் நூலிழையில் உயிர் தப்பினார்கள். பெங்களூரில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த குளிர் சாதன பேருந்தில் பயணிகள் 22 பேர் இருந்தனர்.  பேருந்த கிட்டத்தட்ட கோயம் பேட்டை நெருங்கிவிட்ட வேளையில் வேலப்பன்சாவடி சந்திப்பில் லாரி மீது மோதி விபத்துக்கு ஆளானது. பேருந்தில் இருந்த 22 பயணிகளும் பின் பக்க கண்ணாடியை உடைத்துக்Continue Reading

ஜுலை,28- காங்கிரஸ-திமுக கூட்டணி என்றாலே மக்களுக்கு ஊழல் தான் நினைவுக்கு வருகிறது என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். அவர், ராமேஷ்வரத்தில்.தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையின் “என் மண், என் மக்கள்” நடை பயணத்தை ஆரம்பித்து வைத்து பேசுகையில் இந்த விமர்சனத்தை முன் வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் சென்றுContinue Reading

ஜூலை, 28- என்.எல்.சி. நிர்வாகம் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளது என்.எல் .சி . தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி, என்.எல்.சி. தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறைContinue Reading

ஜுலை, 28- எல்லைத் தாண்டி பாகிஸ்தானுக்குச் சென்று முகநூல் நண்பரை  திருமணம் செய்து கொண்ட அஞ்சுவின் இந்திய கணவர் அரவிந்த் அல்வாரில், தாங்கள் இன்னும் விவாகரத்து செய்யவில்லை, எனவே, அவரால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்து பரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தியாவின் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அரவிந்தும் அவருடைய மனைவி அஞ்சுவும்(வயது 34 ) ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்Continue Reading

ஜுலை,28- தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இடைவிடாது பெய்து வரும் மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்திருந்தது, ஆனால் உண்மையான மழை அதை விட அதிகமாக இருந்தது. வானிலையில் ஏற்பட்ட ஒரு வலுவான சுழல் மாநிலத்தில் வரலாறு காணாத மழையை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.Continue Reading

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகைகளுள் முதன்மையானவர் சரிதா. 45 ஆண்டுகளாக திரைஉலகில் இருக்கிறார். நடுவில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வார்.நீண்ட இடைவெளிக்கு பிறது அவர் நடித்துள்ள மாவீரன் சக்கைபோடு போடுகிறது. மாவீரன் பட அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட சரிதா, ’ மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி நடித்த வேடத்தில், முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது’ என்ற புதிய தகவலையும் வெளியிட்டுள்ளார். ‘மூன்றாம்பிறை படத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்த கேரக்டரில்Continue Reading

ஜுலை,27- விளைந்து கதிர்விடும் நெற்பயிர்களை இயந்திரங்களைக் கொண்டு என்.எல்.சி.நிர்வாகம் அழிக்கும் காட்சியை பார்க்கும் கல் நெஞ்சக்காரர்கள் கூட கலங்கிப் போய்விடுவார்கள். நெய்வேலியை சுற்றி நடைபெற்று வரும் பயிர் அழிப்பு கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தி  உள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. நிறுவனம் தனது இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், வளையமாதேவி கிராமங்களில் கடந்த 2016- ஆம் ஆண்டு விவசாய நிலங்களை கையகப்படுத்தியது. அப்போது ஏக்கருக்குContinue Reading

ஜுலை, 27- இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘ரெட்’ படத்தில் அஜித், சிவப்பு உடையில் ஏதாவது காட்சியில் வந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் சிவப்பு நிற உடை – நரைமுடியுடன் புன்னகை பூத்தபடி வெளியே வரும் தோற்றம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜெயிலர், லால்சலாம் ஆகிய இரு படங்களை முடித்து விட்டு ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி விட்டார்Continue Reading

மணிரத்தினம் இயக்கிய  தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த்சாமி.ரஜினி ஹீரோவாக நடித்த இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் மணிரத்னத்தின், கம்பெனி ஆர்டிஸ்டாக மாறிப்போனார், அரவிந்த்சாமி. ரோஜா, பம்பாய்,செக்கச்சிவந்த வானம் என மணிரத்னத்தின் வெற்றி படங்களில் எல்லாம், அரவிந்த்சாமி இருந்தார். தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்திப்படங்களிலும் நடித்தார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அவர் பிடிவாதம் காட்டாமல் வில்லன் வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்தContinue Reading

ஜுலை,26- கலைச்சேவை செய்வதற்காக கோடம்பாக்கத்தில் இருந்து அடிக்கடி பெரிய நட்சத்திரங்கள் மலேஷியா செல்வது வழக்கம்.அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் தொழில் அதிபர், கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழ் நடிகர்- நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர். போலீசில் சிக்கியுள்ள வர்த்தகர் பெயர் அப்துல் மாலிக் தஸ்கீர்.அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மீம்சல். சின்ன வயதிலேயே மலேஷிய சென்ற மாலிக், துணிக்கடையில் சாதாரண சிப்பந்தியாக  வாழ்க்கையை ஆரம்பித்தார். அங்கு பெரிய நட்புContinue Reading