பி.டி.ஆர்.ஆடியோ சர்ச்சை - விளக்கம்

ஏப்ரல்.23 விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மற்றும சபரீசன் ஆகியோரின் சொத்துக்கள் குறித்து பேசியதாக வெளியான ஆடியோ, தொழில்நுட்ப உதவியுடன் இட்டுக்கட்டப்பட்டது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தின் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன், பேசியதாக 26 விநாடி ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. ‘உதயநிதி, சபரீசன் சொத்துகள் குறித்து பேசியதாக வெளியான அந்த ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ வானதிContinue Reading

ஏப்ரல் 21 தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி 12 மணி நேர வேலை மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிகContinue Reading

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி

ஏப்ரல்.21 திமுக சொத்துப்பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் அண்ணாமலை நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று தொடங்கவுள்ள புத்தக கண்காட்சி திருவிழாவை முன்னிட்டுபாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ராட்சச பலூனை பறக்க விட்டார். மே மாதம் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புத்தகத் திருவிழா நடைபெறும்Continue Reading

அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்

ஏப்ரல்.20 திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் தன் மீதான அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுக.,வினரின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், திமுக.,வினர் குறித்து அவதூறு தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் நோட்டீஸ்Continue Reading

அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்

ஏப்ரல்.17 தி.மு.க தலைவர்கள் சொத்துப் பட்டியல் வெளியீடு தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்பதோடு, ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை கடந்த 14-ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அப்போது,Continue Reading

தமிழில் சிஏபிஎப் தேர்வு - அறிவிப்பு

ஏப்ரல்.15 இந்தியாவில் உள்ள பல்வேறு ஆயுப்படைகளில் பணிபுரிவதற்காக நடத்தப்படும் சி.ஏ.பி.எப் தேர்வு, தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்தியாவில் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட ஆயுதப்படைகளை உள்ளடக்கிய சி.ஏ.பி.எப். (CAPF) அமைப்பிற்கு ஆண்டுதோறும் எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுவருகிறது. இந்த தேர்வானது இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டுவந்தது. இந்நிலையில்,Continue Reading

தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று காலை 10.15 மணிக்கு வெளியிடவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை சென்னை கமலாலயத்தில் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் கடந்த மாதம் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாநிலத்தலைவர் அண்ணாமலை, “தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும். இதனை நான் வெளியிடும்போது, தமிழக மக்கள் இன்னும்Continue Reading