பெரிய நடிகர்கள் விரும்புகிறார்களோ, இல்லையோ ஏதாவது ஒரு பட்டத்தை தங்கள் அபிமான நட்சத்திரங்களுக்கு, அவர்களின் தீவிர ரசிகர்கள் சூட்டி அழகு பார்ப்பது தமிழ் சினிமாவின் இலக்கணமாகி விட்டது.சில நேரங்களில் நடிகர்களால் லாபம் பார்த்த விநியோகஸ்தரோ, தயாரிப்பாளரோ ஒரு ( தம்)பட்டத்தை, நடிகர்கள் தலையில் வைத்து விடுவார்கள். மக்கள் திலகம், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார்,உலகநாயகன், புரட்சி கலைஞர்,புரட்சி தமிழன், சுப்ரீம் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்கள் இப்படித்தான்Continue Reading

ஆகஸ்டு – 28 அல்டிமேட் ஸ்டார் அஜித், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு புதிராகவே இருந்து வருகிறார். பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் பேட்டி அளிப்பதில்லை. தான் நடிக்கும் பட விழாக்களிலும் பங்கேற்பதில்லை.பொது வெளியில் தோன்றுவதையும் தவிர்த்து வருகிறார். திடீரென்று வெளிநாடுகள் செல்கிறார்.அங்கு போய் பைக் ஓட்டுகிறார்.அஜித்தின் சாகசங்களை,அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா, பத்திரிகைகளுக்கு அவ்வப்போது கொடுக்கிறார். அஜித் கடைசியாக நடித்த துணிவு படம் ரிலீஸ் ஆகி 8 மாதங்கள் கடந்து விட்டன.Continue Reading

தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, யாராலும் வீழ்த்தப்பட முடியாத ‘சூப்பர்ஸ்டாரா’கவே இருக்கிறார், ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானபோது, எம்.ஜி.ஆர்.கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகி முழுமூச்சாய் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.அவரது போட்டியாளரான சிவாஜி பொருக்கி எடுத்து நடித்துக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் தமிழில் ‘என்ட்ரி’ ஆகிறார். குறுகிய காலத்திலேயே தனது சீனியர்களான சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோரை கடந்து முன்னோக்கி சென்று முதலிடம் பிடித்தவர், பெவிகாலால் ஒட்டிய மாதிரி சூப்பர்ஸ்டார் பட்டத்தைContinue Reading

சினிமாவை கனவுத்தொழிற்சாலை என வர்ணிப்பார்கள்.நிஜம்தான். ரஜினிக்கு பாட்ஷா என்ற மிகப்பெரிய படம் கொடுத்தவர் இயக்குநர்  சுரேஷ் கிருஷ்ணா. இதனை  அடுத்து  கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் கால்ஷீட் கிடைத்தும்சுமாரான படங்களை கூட அளிக்கவில்லை. இன்னொரு பாட்ஷாவை தருவார் என நினைத்து பாபா படத்தை , சுரேஷ் கிருஷ்ணாவுக்கு வழங்கினார், ரஜினி.அந்த படம் இரண்டாவது நாளே படுத்துக்கொண்டதும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்ததால் ரஜினி தண்டம் அழுததும்  தனிக்கதை. இதனால்Continue Reading

இயக்குநர்களுக்கு உச்ச நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பு.அதனை சரியாக பயன்படுத்தியவர்கள், புகழோடு காசும் பார்த்து விடுகிறார்கள். தவற விட்டோர், சுலபாக மீள்வதில்லை. இந்த பட்டியலில் இடம் பெறுவோரில் முக்கியமானவர் வசந்த். கே.பாலசந்தரின் மாணவர். கேளடி கண்மணி, ஆசை ஆகிய அற்புதமான சினிமாக்களை தந்தவர். பாலசந்தர் தயாரிக்க ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தை இயக்கும் வாய்ப்பு முதலில் வசந்தைத்தான் தேடி வந்தது. பத்திரிகைகளில் விளம்பரமும் வந்து விட்டது. ரஜினியுடன் ஏற்பட்டContinue Reading