அமைச்சர் செந்தில் பாலாஜியை தங்கள் காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமா என்ற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் கடந்த 12- ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி திடீரென உடல் நலக் குறைவு காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரை இந்த மாதம் 28- ஆம் தேதிContinue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை, உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்துள்ளது. சட்ட விரோதப் பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யபட்ட  செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவின் பேரில் காவலில் உள்ளார். உடல் நிலையைக் கருதி அவரை சிறைக்கு கொண்டு செல்லாமல் மருத்துவ மனையில் வைத்து சிகிச்சை தரவும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில்Continue Reading

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். மேலும் அவர் தொடர்பான இரண்டு வழக்குகள் விசாரணைக்கு வர இருக்கின்றன.இந்த நிலையில் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டதை நீக்கக்கோரிய செந்தில் பாலாஜி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். ஏற்கனவே, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலை நீக்கக்கோரிய மனு ஏற்கத்தக்கதல்ல எனContinue Reading

மே.12 கோவை துடியலுர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, உறவினர்கள் வீடு, ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மார்ட்டின் குழும நிறுவன அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை செய்தனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும்Continue Reading

ஏப்ரல்.28 அதிமுக ஆட்சியில் நிலக்கரி வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 2011-2018 வரையிலான அதிமுக ஆட்சியில் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரி கொண்டு வந்ததில் ரூ.908 கோடி மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த ஊழல் தொடர்பாக, சென்னையில் கடந்த 24ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (TANGEDCO)Continue Reading