கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – பல்வீர்சிங்மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
2023-04-18
ஏப்ரல்.18 திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி பல்வீர் சிங்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக பணியாற்றிவந்த பல்வீர் சிங், அப்பகுதியில் சின்ன குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரும்பொழுது, அவர்களின் பற்களை பிடுங்கியும், வாயில் ஜல்லி கற்களை போட்டும் கொடூரமான தண்டனை வழங்கி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சிContinue Reading