மே.1 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் பரப்புரையானது மாநிலம் முழுவதும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், பாஜக-வின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று வெளியிடுகிறார். பெங்களூருவில் உள்ள கட்சி தலைமையகத்தில்Continue Reading

ஓ.பி.எஸ். வேட்பாளர்கள் வாபஸ்

ஏப்ரல்.24 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்திருந்த நிலையில், வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை திரும்பப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு வரும் 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. போட்டியிட விரும்பியது. ஆனால், பாஜக தனியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், அ.தி.மு.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.Continue Reading