காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ராஜஸ்தான் அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையில் உள்ள உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவில்லை. சச்சின் பைலட்டை அவ்வப்போது டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்திக் கொண்டே வந்தது. ஆனால், முந்தைய வசுந்தரா ராஜே தலைமையில் நடந்தContinue Reading

மே.31 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பத்து நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றுள்ள ராகுல்காந்தி, அந்நாட்டில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய ராகுல்காந்தியை, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களைக் கையாளும் சாம் பிட்ரோடா வரவேற்றார். இவர் இந்தியாவின் தொலைத்தொடர்பு புரட்சியின் தந்தை எனப் போற்றப்படுபவர் ஆவார். இந்த 10 நாள் சுற்றுப்பயணத்தின்போது, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்Continue Reading

மே.29 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று அமெரிக்காவிற்கு பயணம் செய்கிறார். நீதிமன்றம் வழங்கிய தடையில்லாச் சான்றிதழைத் தொடர்ந்து, சாதாரண பாஸ்போர்ட் கிடைத்த நிலையில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமது எம்.பி. பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து, அரசு முத்திரை பதிக்கப்பட்ட அவரது சிறப்பு பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். இதையடுத்து, அவர்Continue Reading

மே.27 கர்நாடககாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இன்று புதிதாக 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர். கர்நாடகாவில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலி காங்கிரஸ் 135 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுடன் அன்றைய தினம் 8 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இதனை தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கட்சிContinue Reading

மே.20 கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே.13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டன. அதன்படி, கர்நாடகாவில் இதுவரை இல்லாத வகையில் காங்கிரஸ் 135 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.Continue Reading

கர்நாடகா தேர்தல் - நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

மே.11 கர்நாடக சட்டப்பேரவைக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 20-ந் தேதியுடன் முடிவடைந்த வேட்புமனுத்தாக்கலின் இறுதியில், 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதில் ஆண் வேட்பாளர்கள் 2 ஆயிரத்து 430 பேரும், பெண் வேட்பாளர்கள் 184 பேரும், திருநங்கை ஒருவரும் ஆவார். இந்தத் தேர்தலில்Continue Reading