மே.6 கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட புரூக்பீல்ட்ஸ் மாலில் உள்ள திரையரங்கை முற்றுகையிட முயன்ற போது தமுமுக-வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தி மொழியில் நேற்று திரையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக புரூக்பாண்ட் சாலையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் மாலில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முஸ்லிம்Continue Reading

ஏப்ரல்.25 கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா 4 லட்சம் வீதம் 26 நெசவாளர்களுக்கு 1.04 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த கைத்தறிவு உதவி இயக்குனர் சிவகுமார், சிறுமுகை பகுதியில் கைத்தறி பூங்கா அமைப்பதற்கு அமைச்சர் உறுதி கூறி உள்ளதாகவும், முதற்கட்ட பணிகள் இந்தContinue Reading

கோவையில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

ஏப்ரல்.23 கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வரும் நிலையில் பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கோவை, நீலகிரி ஆகிய குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி. கோவையில் மாநகர் மற்றும் புறநகர்Continue Reading

கோவையில் துப்பாக்கிசுடும் போட்டி

ஏப்ரல்.21 கோவை மேற்கு மண்டல காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு இடையயான துப்பாக்கிச் சுடும் போட்டி மதுக்கரை மலையடிவாரத்தில் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பைகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழக காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்ததை (பொன்விழா ஆண்டு) கொண்டாடும் வகையில் கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழக காவல்துறையில்Continue Reading

என்.ஐ.ஏ சட்டம் - பாஜக அப்துல்லா குட்டி விளக்கம்

ஏப்ரல்.21 பாஜக கொண்டுவந்த என்.ஐ.ஏ சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என பாஜக தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இஸ்லாமியர், கிறிஸ்தவ, ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் சகோதரத்துடன் இந்தியாவில் உள்ளனர். தமிழகத்தில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று பொய்யாகContinue Reading

கோவையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

ஏப்ரல்.21 அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை, கோவையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதனை அங்கீகரித்திருந்தது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாராக அங்கீகரித்துள்ளது. இதனையடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டContinue Reading

கோவையில் செந்தில்பாலாஜி பேட்டி

ஏப்ரல்.15 தேர்தல் ஆணையத்தில் கொடுத்த சொத்து ஆவணங்களைத் தொகுத்து பட்டியல் வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என்னைப் பற்றிய தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார், முதலமைச்சரின் அனுமதிபெற்று அவர்மீது நானே வழக்குத் தொடரவுள்ளேன் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணாமலை காட்டியதை மனசாட்சி இருக்கும் யாருமே பில்லாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பில் எனContinue Reading

கோவையில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு

கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து வழங்கினர். கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து, அனைத்து சமயத்தினர் கலந்து கொண்ட இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக்Continue Reading