சென்னை காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் மூன்று இடங்களில அடைப்புகள் இருப்பதாக கடந்த வாரம் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கான பை பாஸ் அறுவை  சிகிச்சை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் டாக்டர்Continue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை, உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்துள்ளது. சட்ட விரோதப் பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யபட்ட  செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவின் பேரில் காவலில் உள்ளார். உடல் நிலையைக் கருதி அவரை சிறைக்கு கொண்டு செல்லாமல் மருத்துவ மனையில் வைத்து சிகிச்சை தரவும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில்Continue Reading

ஜுன் 16… கடந்த காலங்களில் திமுக எத்தனை முறை சிபிஜ விசாரணை கேட்டு உள்ளது என்பதை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் திமுகவை யாரும் சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலளித்து அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கை கொஞ்சம் சூடாகவே உள்ளது..படியுங்கள்.. “தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது. கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல்Continue Reading

அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த கேள்விகளில் முக்கியமானது அமலாக்கத்துறையால் கைதி என்று அறிவிக்கப்பட்ட பிறகு செந்தில் பாலாஜியை அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்று முதலமைச்சர் சந்தித்தது ஏன் என்பதுதான். இது தொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதைப் பார்க்கலாம்.. “இந்தாண்டு ஆஸ்கார் விருது கொடுத்தால் அமைச்சர்Continue Reading

  புலி படுத்துவிட்டால் குடித்தனம் நடத்த பூனைக் கூப்பிடும் என்பார்கள். அது போலத்தான் செந்தில் பாலாஜியின் கதையும். அவர், இதற்கு முன்பு நான்கு கட்சிகளில் குப்பைக் கொட்டிவிட்டு ஐந்தாவதாக வந்து சேர்ந்த கட்சிதான் திமுக என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார். செந்தில் பாலாஜி இதற்கு முன்பு அண்ணா திமுகவில் அமைச்சாராக இருந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.அதற்கு முந்தைய மூன்று கட்சிகள் எவை என்று தெரியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்தால்Continue Reading

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். மேலும் அவர் தொடர்பான இரண்டு வழக்குகள் விசாரணைக்கு வர இருக்கின்றன.இந்த நிலையில் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டதை நீக்கக்கோரிய செந்தில் பாலாஜி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். ஏற்கனவே, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலை நீக்கக்கோரிய மனு ஏற்கத்தக்கதல்ல எனContinue Reading

சென்னை..ஜூன் 14.. அமைச்சர் செந்தில் பாலாஜியின் எதிர்காலம் அடுத்து எப்படி இருக்கும் என்று ஆராயும் போது அவர் முதலில் அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது. 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்தார் என்பது வழக்காகும். இந்த வழக்கில் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர்Continue Reading

அமலாக்கத் துறை போன்வற்றைக் கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பார்க்கிறது மோடி அரசு என்று இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக கண்டித்து உள்ளார். அவரின் அறிக்கை வருமாறு.. *தமிழக மின்சாரத்துறை அமைச்சர் திரு.வி.செந்தில் பாலாஜியின் அலுவலக சோதனையில் அமலாக்கத்துறையை அப்பட்டமாக பயன்படுத்தியதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது* *துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் போன்றவற்றில் மோடி அரசின் வெட்கக்கேடான முயற்சிகள் இவை. அரசியல் எதிரிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய மோசமானContinue Reading

தருமபுரி, ஜுன் 4. வன்னியர் சமூகத்துக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை சமூக நீதி பேசும் திமுக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டு உள்ளார். தருமபுரியில் பேசிய அவர், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போரட்டங்களை நடத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அன்புமணி கூறியதாவது.. தமிழ்நாடு முதலமைச்சர், மதுவிலக்கு துறைக்கு சமூகContinue Reading