மே.23 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்ட 5500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Continue Reading

மே.23 சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை தொட்டுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (20 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (17 புள்ளி), லக்னோ சூப்பர்Continue Reading

மே.21 சென்னை கோவளத்தைச் சேர்ந்த அலைச்சறுக்கு விளையாட்டு வீரர் இராஜசேகர் பச்சை என்ற இளைஞர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகில் உள்ள கோவளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் பச்சை. 27 வயது இளைஞரான இவர், கடந்த 19ம் தேதி அதிகாலை சுமார் 5-30 மணியளவில் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, அடிவாரத்திற்கு திரும்பிContinue Reading

மே.9 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டஙகளில் சுமார் 10 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகள் மற்றும் என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடையர்வர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுவருவதாகContinue Reading

மே.8 சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ-மாணவியரில் 94.03 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6Continue Reading

மே.8 ஆளுநர் பாராட்டிவிட்டார் என்பதற்காக கொள்கைகளை விட்டு தர மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் த.மோ.அன்பரசன் செங்கோல் வழங்கினார். பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாகContinue Reading

மே.6 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. இன்று மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் விளையாடி 11 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது. இந்த சீசனில் சொந்த மண்ணில் 2-வதுContinue Reading

மே.4 தமிழ் திரைப்படி நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் உட்பட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. 1953ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி மனோபாலா பிறந்தார். 1979-ல் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக பாரதிராஜாவிடம் தனது சினிமா வாழ்க்கைத் தொடங்கினார். டிக் டிக் டிக், நிறம் மாறாத பூக்கள்,Continue Reading

மே.2 தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், இன்றும் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஓரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சை உட்பட பல மாவட்டங்களில் இரவுContinue Reading

சென்னை பூவிருந்தவல்லியில் பிரபல ரவுடியும், பாஜக பிரமுகமான ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பி பி ஜி சங்கர். பிரபல ரவுடியான இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. வளர்பிறை ஊராட்சி மன்ற தலைவராகவும் பாஜகவில் எஸ் சி,எஸ் டி,மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார்.Continue Reading