*மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதமும் பிரதமர் பதிலும் தேவை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.. நாடாளுமன்ற இரு அவைகளும் 3-வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைப்பு. *இந்தியா கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம்.. மணிப்பூரில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவற்கு கண்டனம். *மணிப்பூர் நிலமை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக் வேண்டும்.. உள் துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள். *மாநிலங்களவையில்Continue Reading

*யமுனா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் டெல்லியில் தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்தது..பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை. மேட்ரோ ரயில் போக்குவரத்து பாதிப்பு. *டெல்லியின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது.. தலை நகரில் குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல். *இமாச்சல் பிரதேசத்தில் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு.. முக்கிய சுற்றுலா மையங்களான குலு மற்றும் மணாலி நகரங்கள் முடக்கம். *ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நாளை மதியம் சந்திராயன் – 3Continue Reading

ஜூன்.1 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் இன்று நேரில் சந்திக்கிறார். அப்போது, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோருவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், மத்திய பாஜக அரசுக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில்Continue Reading

மே.31 மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, மல்யுத்த வீராங்கனைககள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கங்கை நதியில் பதக்கங்களை வீசும் போராட்டத்தை விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தற்காலிமாக கைவிட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், தங்களிடம் பாலியல்Continue Reading

மே.29 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று அமெரிக்காவிற்கு பயணம் செய்கிறார். நீதிமன்றம் வழங்கிய தடையில்லாச் சான்றிதழைத் தொடர்ந்து, சாதாரண பாஸ்போர்ட் கிடைத்த நிலையில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமது எம்.பி. பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து, அரசு முத்திரை பதிக்கப்பட்ட அவரது சிறப்பு பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். இதையடுத்து, அவர்Continue Reading

மே.18 நடப்பாண்டில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர். மத்திய அரசின் திட்டக்குழுவுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பினை பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்தது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திரமோடியும், துணைத்தலைவராக சுமன் பெரியும் இருந்துவருகின்றனர். இந்த அமைப்பின் ஆட்சிமன்றContinue Reading

மே.8 டெல்லி ஜந்தர்மந்தரில் மல்யுத்த வீரர்கள் மேற்கொண்டுவரும் 2ம் கட்டப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், விவசாயிகள் ஏராளமானோர் டெல்லிக்கு படையெடுத்த நிலையில், அவர்களை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பை பலப்படுத்திவருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் 2 ஆம்Continue Reading

மே.6 நான் ஒரு பைசா ஊழல் செய்துள்ளதாக நிரூபித்துவிட்டால்கூட என்னை பகிரங்கமாகத் தூக்கிலிடுங்கள் என பிரதமர் நரேந்திரமோடிக்கு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஆம் ஆத்மி கிளினிக் திறப்பு விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்Continue Reading

ஏப்ரல்.27 டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தமிழகத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவினரிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தது. இதனால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவின. இதைத் தொடர்ந்து, ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தContinue Reading

ஏப்ரல்.27 கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்து மாம்பழங்களையும் உடன் எடுத்துச்சென்றார். கோவையிலிருந்து விமானம் மூலம் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி கிளம்பினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரும் சென்றனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். இதையொட்டி, கோவை விமான நிலையத்திற்கு வந்த ஈபிஎஸ்-க்குContinue Reading