ஜூன்.2 தமிழகத்தில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலைகள், குடோன்களை அரசு தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு தமது டிவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி இரங்கள் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பதிவில், சர்க்கார் கொல்லப்பட்டி விபத்தில் காயமடைந்த மேலும்Continue Reading

மே.27 தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்துவதை பள்ளிக்கல்வித்துறை ஒரு மாத காலம் ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 1,545 அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டுவருகிறது. இதன்மூலம், ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்ததால், இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காகContinue Reading

மே.26 தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து, அவற்றின் விவரங்களை ஒரு மாதத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்ற செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 5.90 ஏக்கர் நிலம் பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்துக்கு 1968-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. 25 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கான கெடு 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து,Continue Reading

மே.25 தமிழ்நாட்டில் அனைத்து அரசு பேருந்துகளிலும் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. 3 வயது முதல் 12 வயது வரையான சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது,Continue Reading

மே.18 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஜல்லிகட்டு போட்டிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. தைத் திருநாளையொட்டி, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியானது, தைப்பொங்கலையொட்டி, முதலில் மதுரை மாவட்டத்தில்,Continue Reading

மே.18 தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு எதிராக விலங்குகள் நலவாரியம் , பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்ப வழங்கவுள்ளது. தைத் திருநாளையொட்டி, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியானது, தைப்பொங்கலையொட்டி, முதலில் மதுரை மாவட்டத்தில், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் முதலில் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறுContinue Reading

மே.9 தமிழக அமைச்சரவை மாற்றத்தில் பட்டியலினத்தவர்களுக்கு துணை முதல்வர் மற்றும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னைContinue Reading

மே.8 தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மே 10ம் தேதி முதல் 15 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடப்பாண்டில் மே மாதம் 10 ந்தேதி முதல் 24 ந்தேதி வரை 15 நாட்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி,Continue Reading

மே.4 தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தார். பல்லைக்கழகங்கள் தொடர்பான 8 மசோதாக்களை தடுத்து நிறுத்தியதற்குக் காரணம், கல்வி என்பது ஒரு பொதுவான விஷயமாக இருக்கிறது என்றா. தொடர்ந்து பேசிய அவர், 1956-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) ஒரு வரையறை உள்ளது. அதனுடன் எந்த மாநில விதிகளும்Continue Reading

மே.2 தமிழகத்தில் செயல்படும் சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சீர்திருத்தப் பள்ளியாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, தங்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டதே, சிறார் கூர்நோக்கு இல்லங்கள். மாவட்ட அளவில் உள்ள இந்த கூர்நோக்கு இல்லங்கள், மாநில அரசின் சமூகப் பாதுகாப்பு துறையின்கீழ் செயல்படுகின்றன.Continue Reading