மே.31 சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் 9 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு தமிழகம் திரும்புகிறார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முதலீட்டாளா்களை அழைப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் கடந்த 23-ந்தேதி 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான்Continue Reading

மே.31 தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அக்னிநட்சத்திரத்தால் கடுமையான வெயில் வாட்டியெடுத்தது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்திய நிலையில், அவ்வப்போது பல இடங்களில் மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 30ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தContinue Reading

மே.31 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் மரணமடைந்தது தொடர்பாக தனி நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென அவரது தாயார் செல்வி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்தார். இதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்து அந்தப்Continue Reading

மே.30 குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜூன் 15ம் தேதி சென்னை வருகிறார். சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து வைக்கவுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மருத்துவமனையை திறந்துவைப்பதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Continue Reading

மே.30 ஐப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அந்நாட்டைச் சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.819 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சென்னையில் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.அதன்படி, கடந்த 23-ந் தேதியன்று சிங்கப்பூர் சென்றContinue Reading

மே.29 தமிழகத்தில் நடைபெற்ற விஷசாராய மரணங்கள், சட்டம்ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்சனைகளைக் கண்டித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு அதிமுக சார்பில் இன்று நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயணம் குடித்த 22 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. அதேபோல், திமுக ஆட்சியில் தமிகத்தில் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டிவந்தது. இந்நிலையில், இந்த பிரச்சனைகளை கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்டContinue Reading

மே.29 தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் மாணவ-மாணவியர் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் விண்ணப்பம் செய்துள்ளனர். இடங்கள் குறைவாகவும், விண்ணப்பங்கள் அதிகமாகவும் வந்துள்ளதா, இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்குContinue Reading

மே.29 தமிழகத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. கடந்த 25 நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலிலிருந்து விடுதலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் என்றழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதற்கு முன்பாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் அதன் உக்கிரம் மேலும் அதிகரித்தது. இருப்பினும், தமிழகத்தின்Continue Reading

மே.27 தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேலடுக்கு சுழற்சியால் பல மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. இதன்மூலம் கோடைகாலத்தில் பெய்யவேண்டிய இயல்பானContinue Reading

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் -7 க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஐந்தாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் வெப்பத்தின்Continue Reading