மே.11 தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனான மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா இன்று பதவியேற்கிறார். தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிவடைந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழக அமைச்சரவையில் 3 முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாக்கா மாற்றம், அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நியமனம் உள்ளிட்ட மாற்றங்களின் வரிசையில், கடந்தContinue Reading

மே.10 தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளுக்கான காலியிடங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளதோடு, வழக்குகளின் நிலுவையும் உயரும் நிலை உருவாகியுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால், அன்றாட நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, வழக்குகளில் சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு, இடைக்கால உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளை தயார்Continue Reading

மே.10 தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாறவுள்ளதைக் குறிக்கும் வகையில், தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.Continue Reading

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மே.9 தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ்டுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 05.30Continue Reading

மே.9 தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை 2021ம் ஆண்டு மே 7-ம் தேதி ஆட்சி அமைத்தது. பதவியேற்ற ஓராண்டுக்குள் அமைச்சரவையில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த வரிசையில், கடந்த டிசம்பர் 14-ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைContinue Reading

மே.9 கோவையில் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டது. கலவர சூழல்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க இந்த டிரோன்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது கோவை காவல் பயிற்சிContinue Reading

மே.8 சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ-மாணவியரில் 94.03 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6Continue Reading

மே.8 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை (மே.9) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றுContinue Reading

மே.6 தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதனால், அப்பகுதிகளில் மே 7 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், மே 8 ஆம் தேதியில்Continue Reading

மே.6 தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 8-ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வி துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில்Continue Reading