மே.5 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நோளை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என்றும், இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மே 8ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தமிழகContinue Reading

மே.4 தமிழகம் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வரும் 06.05.2023 மற்றும் 07.05.2023 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரிContinue Reading

மே.4 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தை அக்னிநட்சத்திர காலம் அல்லது கத்திரி வெயில் காலம் என அழைக்கின்றனர். அதன்படி, இந்த ஆண்டுக்கான கத்திரிContinue Reading

ஜல்லிக்கட்டு வழக்கில் இந்த மாதம் தீர்ப்பு?

மே.4 தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இம்மாத இறுதிக்குள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகா மாநிலத்தில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட இந்த பாரம்பரிய விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கக் கோரியும் பீட்டா உள்ளிட்டContinue Reading

அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

மே.3 தமிழகத்தில் மூத்த அமைச்சர்கள் பொதுவெளியில் பேசும்போது விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையிலான பேச்சுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் 7ஆம் தேதியுடன் 2 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்கிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, நிதிநிலைContinue Reading

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்

மே.3 தமிழகத்தில் வரும் 7 அல்லது 8ம் தேதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறினார்.சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர்Continue Reading

மே.3 சென்னையில் கடந்த 27ம் தேதி பாஜக பட்டியலின மாநிலப் பொறுப்பாளர் சங்கர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி பாஜக பட்டியலின மாநில பொருளாளர் சங்கர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேர் இதுவரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில், சங்கர் கொலை செய்யப்பட்டதை கண்டித்துContinue Reading

மே.2 நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில், 1,87,035 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாயாக வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வசூலான தொகையைவிட 12 சதவீதம் அதிகமாகும். இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவசூல், முதல் முறையாக ₹1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023 மார்ச் மாதத்தில் மொத்தம் 9 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டதாகவும், இது அதற்கு முந்தைய மாதத்தை விட 11%Continue Reading

மே.2 தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், இன்றும் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஓரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சை உட்பட பல மாவட்டங்களில் இரவுContinue Reading

ஈ.ஆர்.ஈஸ்வரன் வேதனை

மே.1 தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு வழி வகை செய்யவில்லை என கொமதேக பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாய அணி சார்பில் அடுத்த தலைமுறையை தாண்டி விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் விவசாய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டContinue Reading