போட்டி? —- பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, மழைக்குகூட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பக்கம்ஒதுங்காதவர்.அரசியல் குறித்து அவர்பேசியதில்லை.ஆனால் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி, அரசியல் பற்றி வதேராவை  பக்கம் பக்கமாக பேச வைத்துவிட்டார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்டநம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது பேசியஸ்மிரிதி ராணி‘’பிரியங்கா கணவர் வதேராவுக்கும், தொழில் அதிபர் அதானிக்கும் வர்த்தக ரீதியாக தொடர்புஉள்ளது’’ என கொளுத்திபோட்டதோடு, வதேராவும், அதானியும் சேர்ந்து இருக்கும்Continue Reading

ஆகஸ்டு,13- யதார்த்தமான நடிப்பினால் ரசிகர்கள்நெஞ்சங்களை தொட்டு, தமிழ் சினிமாவில் பெரிய உயரத்தை எட்டியவர் நடிகர் விஜய் சேதுபதி. ’இமேஜ்’பார்க்காமல் வில்லன் வேடத்திலும்விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.ரஜினி, விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்த அவர் இந்திக்கும் சென்று விட்டார்.ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் சேதுபதிதான் வில்லன். விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கப்போவதாக சேரன் கூறியிருந்தார். இந்த புராஜெக்ட்  தொடர்பாக இருவரும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது கதையின்Continue Reading

ஜாதி வன்மம் எப்போதுமே கொதிநிலையில் இருக்கும் மாவட்டங்களில், நெல்லைக்கு‘முதலிடம் ‘உண்டு. ஆட்சிகள் மாறினாலும் இங்குள்ள அரிவாள் கலாச்சாரம் மட்டும் மாறுவதே இல்லை. மீண்டும் ஒரு ஜாதி யுத்தத்துக்கு  கால்கோள் போட்டுள்ளது, நாங்குநேரி. நெல்லையில் பதற்றம், பீதி, அச்சத்தை விதைத்துள்ள பூகம்பத்தின் மையப்புள்ளி.அரசாங்க மேல்நிலைப்பள்ளி என்பது அதிரவைப்பதாக உள்ளது. என்ன நடந்தது அங்கே? நாங்குநேரியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி– அம்பிகாபதி தம்பதியின் மகன் சின்னத்துரை, 17 வயதான இவர்,வள்ளியூரில் உள்ளContinue Reading

—- நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதனைத்தொடர்ந்து வெளியான ‘தெகிடி’ ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்கள் மூலமாக கவனம் ஈர்த்தார். அண்மையில் வெளியான ‘போர் தொழில்’ அசோக் செல்வனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.அந்தப்படம் மாஸ் ஹீரோவாக, அவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது. இவரும், நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனும்Continue Reading

ஆகஸ்டு,11- ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் அவருடைய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து நகரங்களிலும் ஒரே நேரத்தில் வெளியான  ஜெயிலர் படத்தைப் பார்க்க அனைத்து திரை அரங்குகளிலும் கூட்டத்திற்கு குறைவில்லை. மதுரையில் மட்டும்  28 தியேட்டர்களில் ஜெயிலர் ரிலீஸ் ஆகி உள்ளது. அனைத்து தியேட்டர்களிலும் ரஜினி ரசிகர்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் குவிந்தனர். முதல் காட்சியை காண ரசிகர்கள் சிலர் சிறைக் கைதி போன்று உடையணிந்து வந்துContinue Reading

ஆகஸ்டு,11- சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம், ‘மாவீரன்’.‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கிஉள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஊடகங்களாலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட இந்தப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மாவீரன் இதுவரை 89 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகContinue Reading

ஆகஸ்டு,10 அமைச்சசர் செந்தில் பாலாஜியிடம் தற்போது அமலாக்கத் துறை நடத்தும் விராணை முடிந்த பிறகு  அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார என்ற கேள்வி எழுந்து உள்ளது. விசாரணையின் போது புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரை பிணையில் விடுவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்து உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி மேலும் கூறியதாவது.. அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை விசாரித்துContinue Reading

ஆகஸ்டு,10- இந்திய கிராங்களில் ஆரம்பக்கல்வி மேம்பாடு அடைந்துள்ளதா? கிராமப்புற குழந்தைகள் ஒழுங்காக படிக்கிறார்களா? என அண்மையில் ஒரு சர்வே நடத்தப்படது. நாடு முழுவதும் 21 மாநிலங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 229 பெற்றோரிடம் இந்த சர்வே நடந்தது. சர்வே முடிவுகளை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டு இருக்கிறார். முடிவுகள் மூச்சு திணற வைக்கும் ரகம். 6 முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவ- மாணவிகளின் பெற்றோர்,Continue Reading

ஆகஸ்டு,10- நடிகர் ரஜினிகாந்த், புதிய திரைப்படத்தில் நடித்து முடித்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். உடல்நலக்குறைவு, கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அவர் இமயமலை செல்லவில்லை. ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் அவர் இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நேற்று காலை 9 மணிக்கு சென்னை விமானநிலைய உள்நாட்டு விமான முனையத்துக்கு காரில் வந்திறங்கினார். அங்கிருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்Continue Reading

ஆகஸ்டு,09- நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நாயகனாக கருதப்படும் ராகுல் காந்தி பேசியது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்கள் மோடி, மோடி என்று குரல் கொடுத்தார்கள். இதற்கு போட்டியாக காங்கிரஸ் உறுப்பினார்ள் ராகுல்,ராகுல் என்று குரல் எழுப்பினார்கள். ராகுல் காந்தி பேச்சு வருமாறு..Continue Reading