அதிக சொத்து சேர்த்துள்ள தென்னிந்திய நடிகர்கள் பட்டியலை ஜும் தொலைக்காட்சிவெளியிட்டுள்ளது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்குசொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. நாகார்ஜுனா ஒரு படத்துக்கு 20 கோடிரூபாய் சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிக்க 2 கோடி ரூபாய் கொடுக்கிறார்கள். 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகர்கள் மத்தியில் இவருக்கு எப்படி 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துசேர்ந்தது?Continue Reading

ஆகஸ்டு, 01- சென்னை அடுத்த முட்டுக்காட்டில் வானத்தில் தென்பட்டது பறக்கும் தட்டு கள் என்ற தகவல் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பான படங்களை தமிழக காவல் துறையில் டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிரதிப் வி பிலிப் வெளியிட்டதை அடுத்து விசாரணைகள் உருவாகி இருக்கிறது. கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் கடந்த புதன் கிழமை வானத்தில் பளிச்சென்ற ஒளியுடன் கூடியContinue Reading

ஆகஸ்டு,01- நடிகர் டேனியல் ஆனி போப் ‘பொல்லாதவன்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு நண்பராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். டேனியல் ஆனி போப்,’ டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோ’ எனும் நடிப்புப் பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்துள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட  நடிகர் ராதாரவிக்கு ,Continue Reading

ஆகஸ்டு, 1-  தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அருகே இன்று அதிகாலை மூன்று மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கருப்பு நிற ஸ்கோட கார் வேகமா வந்தது.  நிறுத்த முற்பட்ட போது அந்த காரை ஓட்டி வந்தவர் நிறுத்தவில்லை.  உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது கார்Continue Reading

ஆகஸ்டு,01- தமிழ் சினிமாக்கள் பொதுவாக வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும். சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி தேதி வெளியான சுப்பிரமணியபுரம், வழக்கமான வெள்ளிக்கிழமை படமல்ல. 16 வயதினிலே, ஒரு தலைராகம் வரிசையில் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது, இந்தப்படம். கம்பெனி ப்ரொடக்சன் எனும் நிறுவனத்தில் பெயரில் சசிகுமார் தயாரித்து, முக்கிய கேரக்டரிலும் நடித்தார். 1980- களில் அரசியல் தூண்டுதலால் கொலையில் ஈடுபடும்Continue Reading

ஜுலை,31- தக்காளியும், தங்கமும் எப்போது விலை கூடும், எப்போது குறையும் என்று வணிகர்களால் கணிக்க முடியாத வஸ்துவாக உள்ளன. இப்போது தக்காளிக்கு பொற்காலம். தமிழக சந்தை சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில், ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை உயர்வு நீடித்து சில்லறை கடைகளில் ஒரு கிலோ 220 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. காயம் பட்டு யாருக்காவது ரத்தம் வழிந்தால்,’முகத்தில் என்ன தக்காளி சட்னியா?’ என கேட்க முடியாது.Continue Reading

ஜுலை- 31- இளையதளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் ஜோடியாக  த்ரிஷா நடிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர்கள்  மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட  பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய் தனது போர்ஷன்களை முடித்துக்கொடுத்து விட்டார். எஞ்சிய கட்சிகளின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாகContinue Reading

ஜுலை, 31- சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர்  நடித்து 2015-ம் ஆண்டு வெளியான படம், ‘வேதாளம்’. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம் தெலுங்கில் ‘போலா சங்கர்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா ஜோடியாக நடித்துள்ளார். சிரஞ்சீவி தங்கையாக  கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.. மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இந்தப்படம் .அடுத்த மாதம் 11-ம் தேதி வெளியாகContinue Reading

ஜுலை,30- இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு எனும் பெயரில் சின்ன பொறியாக மணிப்பூரில் ஆரம்பித்த போராட்டம் இன்று மதச்சண்டையாக மாறி, அந்த மாநிலத்தை மரணக்குழிக்குள் தள்ளி விட்டுள்ளது. இந்த மத வெறியர்களின் செவிட்டில் ஓங்கி அறைவது போல் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம், சமூக நல்லிணக்கத்தின் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. கொல்லம் அருகேயுள்ள குக்கிராமம் ஈழவரம் குழி. இந்துக்களும், இஸ்லாமியர்களும் மாமன் -மச்சானாக உறவு முறை சொல்லி அழைத்து நட்பைContinue Reading

ஜுலை, 29- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு துப்பாக்கி கொடுத்து மணிப்பூருக்கு அனுப்பி வைக்கச் சொன்ன பத்ரி சேஷர்த்ரி என்பவை பெரம்பலூர் மாவடட் போலிசார் கைது செய்து உள்ளனர். சென்னையை சேர்ந்த இவர் கிழக்கு பதிப்பகம் என்ற பதிப்பகத்தின் உரிமையாளரும் ஆவார். ஆர்.எஸ்.எஸ். இயக்கச் சிந்தனையாளரான பத்ரி கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி விவாதங்களில் பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்து பேசுகிறவராக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்தContinue Reading