சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் போதிய ஆதரமில்லை என்று கூறி வேலூர் மாவட்ட நீதிமன்றம் விடுவித்து உள்ளது. இப்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி மற்றும் அவருடை மனைவி விசாலாட்சி மீது கடந்த 2006 -ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இவர்கள் இரண்டு பேரும்Continue Reading

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஜூன் முதல் 2020 ஜூலை வரை மதுரை மாநகர காவல் ஆணையராக பதவி வகித்தார் டேவிட்சன் ஆசீர்வாதம். அப்போது, வெளிநாட்டினருக்குப் பாஸ்போர்ட் வழங்கியதில் முறைகேடு என குற்றம்சாட்டப்பட்டது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே,Continue Reading

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் உச்சம் தொட்டவர்கள் மூன்று பேர்.‘மச்சானப்பாத்தீங்களா?’ என அன்னக்கிளியில் ஆரம்பித்த இளையராஜாவின் இசைப்பயணம் ஆயிரம் படங்களை தாண்டி  அவரை ஓட வைத்துக்கொண்டிருக்கிறது. ரோஜா  படத்தின் ’சின்ன சின்ன ஆசை’ மூலம் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆஸ்கர் வரை உயர்ந்தார். நடிகர் ராகவேந்தரின் மகனான அனிருத், “3” படம் மூலமாக 21 வயதில் சினிமாவுக்கு வந்தார்.ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமும் அதுதான் தனுஷ்-Continue Reading

ஜூன்,26. சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பதாகையை போலிஸ் துணையுடன் அதிகாரிகள் அகற்றியபோது பதற்றமான சூழல் நிலவியது. தமிழ்நாட்டில் முக்கியமான கோயில்கள் அனைத்தும் அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் இருக்கையில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மட்டும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் ஆனித் தரிசனம் நடைபெறுவதற்கு முதல் நாள் தீட்சிதர்கள் திடீரென கனகசபை மீது ஏறிவந்து பக்தர்கள்Continue Reading

ஜுன்,26- அமைச்சர் செந்தில்  பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது சட்டப்படி சரியா? தவறா என்ற  விவாதம் அனைத்துத் தரப்பிலும் நடை பெறுகிறது. சட்டம் எது சொன்னாலும் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் அரசியல் நெறிப்படி அமைச்சராக நீடிக்கக்கூடாது  என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த சூழலில் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குContinue Reading

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,, தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை2,29,175. அதில் பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847.கடந்த ஆண்டை விட 18 ஆயிரத்து 767 பேர் அதாவது 11.09% கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர்.Continue Reading

நிதிப் பரிமாற்ற கணக்கு அறிக்கைகளை முறையாக காட்டாதது தொடர்பாக  பத்தாயிரம் வழக்குகள் தமிழ்நாட்டில் பதியப்பட்டு உள்ளதாக  வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.இந்த வகை வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரு மடங்கு கூடி இருப்பதாகவும் வருமானவரித்துறை கூறியுள்ளது. முறையாக கணக்கு காட்டாத வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் தொடர்புடைய முதலீட்டில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்டவைகள்Continue Reading

அப்பர் கோதையாறு அருகே குட்டியாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக்கொம்பன் யானை சரியான உணவு எடு்த்துக் கொள்ளாததால் உடல் நலக்குறைவுக்கு ஆளாகி மெலிந்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இயற்கை ஆர்வலர்களை கவலைக் கொள்ளச் செய்துள்ளது. தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் மயக்க ஊசிச் செலுத்தி கடந்த 5- ஆம் தேதி பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை வனத்துறை அலுவலர்களால் லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம் களக்காடு வனத்திற்கு கொண்டு செல்லப்படட்து. இரண்டுContinue Reading

தமிழர் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் கவியரசர் கண்ணதாசனின் 96 ஆவது பிறந்தநாள், இன்று. எழுத்தாளர்,கவிஞர்,பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர்,மேடைப்பேச்சாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர்,கண்ணதாசன். சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியை சேர்ந்த சாத்தப்பா- விசாலாட்சி தம்பதியின் எட்டாவது குழந்தை கண்ணதாசன். சிறு வயதிலேயே பழனியப்பன் -சிகப்பி தம்பதிக்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு தத்து கொடுக்கப்பட்ட அவர், பெற்றோர் தனக்கு சூட்டிய முத்தையா எனும் பெயரை பிற்காலத்தில் கண்ணதாசன் என தத்தெடுத்துக்கொண்டார். பிஞ்சுContinue Reading

ஆதரவற்று உயிரிழந்தோர் உடல்களை அடக்கம் செய்து வரும் சமூக சேவகருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்ஸை நடிகர் ரஜினிகாந்த பரிசாக வழங்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் கடந்த 21 ஆண்டுகளாக ஆதரவில்லாமல் அனாதையாக இறந்துவிடுகிறவர்களின் உடலை அடக்கம் செய்து வருகிறார். இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் மணிமாறனைப் பற்றி விசாரித்து அவருக்கு தேவைப்படும் ஆம்புலன்சுக்கான முழு பணத்தையும் ஷோ ரூம் ஒன்றில் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தContinue Reading