ஆகஸ்டு,31- உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியை சேர்ந்தவர் அபர்ஜித். கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அபர்ஜித்தை துப்பாக்கி முனையில் வழிமறித்த இரண்டு பேர், அவரது பைக், செல்போன், மற்றும் பர்சை பறித்துக்கொண்டுதப்பிச்சென்றனர். இது குறித்து அபர்ஜித் அங்குள்ள சாபியா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இந்த கொள்ளை தொடர்பாக அங்கித் வர்மா உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனால் அங்கித் தலைமறைவானார்.Continue Reading

ஆகஸ்டு, 31- பீகார் மாநில முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் பதவி வகித்து வருகிறார். லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி.கட்சியும் , காங்கிரசும் இந்த கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. பீகார் மாநில பள்ளிக்கல்வித்துறை, அரசு பள்ளிகளின் விடுமுறை நாட்களை குறைத்து வெளியிட்டுள்ள அறிவிப்பு அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து பண்டிகைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த விடுமுறை நாட்கள் கணிசாமாக குறைக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணம். நடப்பு ஆண்டில்Continue Reading

ஆகஸ்டு,31- மற்ற பண்டிகைகளை காட்டிலும் தமிழகத்தில் தீபாவளிக்குத்தான் மதுபான விற்பனை அமோகமாக இருக்கும். அதுபோல் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது, சரக்கு விற்பனை தூள் பறக்கும். தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான வாணிப கழகம் மது விற்பது போல் அந்த மாநிலத்தில் கேரள அரசின் மதுபான கழகம் மூலம் அரசாங்கமே மது விற்பனை செய்கிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையை யொட்டி கடந்த 11 நாட்களில் 770 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்றுContinue Reading

ஆகஸ்டு,31- பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்ட தொடர் முயற்சிகளால் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி சாத்தியமாகியுள்ளது.எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் ஆலோசனை கூட்டத்தை அவரே,ஏற்பாடு செய்து பாட்னாவில் நடத்தினார். இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.இதில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி செய்திருந்தது.அனைத்து தலைவர்களுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விருந்தளித்தார்.எதிர்க்கட்சிகள் அணிக்கு ‘இந்தியா’ என இந்தContinue Reading

*சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிட்ட படி நாளை மறுதினம் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவுவதற்கான ஏற்பாடுகள் தயார் .. விண்கலத்தின் உட்புற சோதனைகள் நிறைவடைந்து விட்டதகாவும் இஸ்ரோ தகவல். *நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்து வரும் பிராக்யன் ரோவர் , விக்ரம் லேண்டரை படம் எடுத்து அனுப்பி சாதனை … ஸ்மைல் ப்ளீஸ் என்ற அடைமொழியுடன் படத்தை வெளியிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.Continue Reading

ஆகஸ்டு,30- பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும் நடைபெற்றது. மூன்றாவது கூட்டம் நாளை (வியாழக்கிழமை )மும்பையில் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ஏற்கனவே 26 கட்சிகள் உள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் மும்பை கூட்டத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது., மும்பையில் நடைபெறும் கூட்டத்தில், கூட்டணியின் புதிய லோகோContinue Reading

ஆகஸ்டு.30- பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 327 கிலோ ஹெராயின், ஐந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்கள் கேரளா மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலானாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். போதைப்பொருள், ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஆதிலிங்கம் என்பவர்Continue Reading

ஆகஸ்டு, 30 – ஜாதிக்கட்சிகள் விதையூன்றி,முளையிட்டு, பூப்பூத்து,மரமாகிப்போன தமிழகத்தில் ஜாதிய மோதல்களுக்குகுறைச்சல் இல்லை.’இது நல்லதல்ல’ என போதிக்க கடமை பட்ட ஆசிரியர்களே, இந்த மரங்களுக்கு உரம் போட்டு வளர்க்கிறார்கள் என்பது அதிர வைக்கும் செய்தி. இதனை ஒடுக்க தமிழக அரசு இப்போது மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளது. ஜாதி மோதல்களை தூண்டி விட்டு ’அழகு’பார்த்த அரசு கல்லூரி பேராசிரியர்கள் மூன்று பேருக்கு தமிழக அரசாங்கம் தண்டனை கொடுத்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர்Continue Reading

*தமிழ்நாடு அரசு காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் அடி தண்ணீரை திறந்துவிடுமாறு கோரியிருந்த நிலையில் 15 நாட்களுக்கு விநாடிக்கு ஐந்தாயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும்… கர்நாடக மாநில அரசுக்கு டெல்லியில் நடைபெற்ற காவரி மேலாண்மை ஆணையக் கூட்டம் உத்தரவு. *காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்க கர்நாடக அரசு மறுப்பு .. அணைகளில் 47 சதவிகித தண்ணீர் உள்ளதால் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றுContinue Reading

ஆகஸ்டு,29- தமிழ் சினிமா இயக்குநர்கள், தங்கள் வாரிசுகளை,நடிகர்களாக களம் இறக்குவதில் தான் ஆர்வம் காட்டுவதுவழக்கம். பாரதிராஜா மகன் மனோஜ், பாக்யராஜ் மகன்சாந்தனு, கஸ்தூரி ராஜா மகன் தனுஷ், பாண்டியராஜன் மகன்பிருத்வி ராஜன், பி.வாசு மகன் சக்தி ஆகியோர் உதாரண புருஷர்கள். டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரும், தனது மகன் விஜயை இயக்குநர் ஆக்காமல், ஹீரோ ஆக்கினார் .அவர் இன்றைக்கு,ரஜினி, கமலை மிஞ்சி, சம்பளம் வாங்குகிறார்.அரசியலில் குதித்து முதல்வர் ஆகும் திட்டமும் உண்டு.Continue Reading