ஆகஸ்டு,04- தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் தூங்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் கடிகாரம் போல் இயங்கிக்கொண்டே இருப்பவர்கள். இந்தியன் -2 வும், கேம் சேஞ்சரும் தான் ,ஷங்கரின் இப்போதைய மூச்சு. மணிரத்னம், கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்துக்கான கதையில் மூழ்கி கிடக்கிறார். இருவருமே தமிழ் சினிமாவை இந்தியாவை தாண்டி கொண்டு சென்றவர்கள். எந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இயக்குநர்கள் சக டைரக்டர்களுடன் ஒரு பொன்மாலைContinue Reading

ஆகஸ்டு,02- ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகனும்  தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான ரவீந்திர நாத் எந்த நேரத்திலும் கைது செய்து விசாரிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்படுவதை தவிர்க்க அவர் முன் ஜாமீன் கேட்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ரவீந்திர நாத் தன்னை படுக்கைக்கு அழைப்பதாக பெண் ஒருவர்,சென்னை போலிஸ் ஆணையர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த புகாருதான் இதற்கு காரணம். செங்கற்பட்டு அடுத்து உள்ள ஏகாடூரில் வசிக்கும்Continue Reading

ஜுலை,30- மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தொடங்கிய மே 3- ஆம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் அரசு இயந்திரம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரியவந்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் தெரிவித்து உள்ளது. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மணிப்பூர் சென்ற 21 எம்.பி.க்கள் அடங்கிய குழு சுராசந்த்பூர், மொய்ராங் மற்றும் இம்பால் ஆகிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்கு தங்கியிருப்பவர்களைச் சந்தித்தது.Continue Reading

ஜுலை,30- இந்திய சினிமாவில் குறிப்பிடும் படியான டைரக்டர்களில் ஒருவர் பிரியதர்ஷன் . 1984 -ஆம் ஆண்டு மலையாள சினிமா மூலம்  திரைஉலக வாழ்க்கையைஆரம்பித்த .பிரியதர்ஷன், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட அனைத்து பிரபல நடிகர்களையும் ஆட்டு வித்தவர்.. இதுவரை 96 படங்களை இயக்கி உள்ளார். மலையாளம் தவிர  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களும் டைரக்டு செய்துள்ளார் அவர் இப்போது இயக்கி உள்ள ‘அப்பத்தா’ என்ற படம்  ஓடிடிதளத்தில் வெளியாகிContinue Reading

ஜுலை,29- பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் பிரிந்து தனி நாடாவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கனடாவில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் நெய்லா குவாட்ரி கேட்டுக் கொண்டு உள்ளார். பாகிஸ்தானில் பிறந்து கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசிக்கும் நெய்லா இந்தியாவின் ஹரித்துவார் நகரத்திற்கு வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பலுசி்ஸ்தான் மாகாணம் விடுதலை பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) பிரதமர்Continue Reading

ஜுலை,29- மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களை கடந்து வந்த இந்த யாத்திரை ஸ்ரீநகரில்  ஜனவரி 30 ஆம் தேதி நிறைவடைந்தது.  மொத்தம் . 4,000 கி.மீ. ராகுல் நடந்தார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் ராகுல், தனதுContinue Reading

ஜுன், 27- உலகில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவர்களில் ஒருவரான கம்போடியப் பிரதமர் ஹுன் சென் ஒரு வழியாக ராஜினாமா செய்துவிட்டார்.  கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் பதவியில் இருந்த அவர்,  தனது மூத்த மகனிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு பதவி விலகுவதாக தெரிவித்து இருக்கிறார். கம்போடியாவில் ஹுன் சென் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். அவர்,  தான் அதிகாரத்தில் இருப்பதை எதிர்க்கும் அனைவரையும்Continue Reading

ஜுலை,25- மும்பை குண்டு வெடிப்பு,குஜராத் கலவரம் போன்ற பயங்கரவாத செயல்களுடன்  தொடர்பு உள்ள தவ்ஃபிக் என்பவரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த இவர் சென்னை வந்த காரணம், போலிசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் அக்பர் என்பவர், ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை தவ்பிக் தெரிந்து வைத்துக்கொண்டு, என்.ஐ.ஏ அதிகாரி போல் நடித்து கடந்த 2020Continue Reading

ஜுலை,25- ’நெல்லை எனக்கு தொல்லை’ என திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அடிக்கடி சலித்துக்கொள்வார். நெல்லையிலிருந்து பிரிந்து உருவான தென்காசியும்,திமுகவுக்கு  தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம்? தென்காசி வடக்கு மாவட்ட திமுக  செயலாளராக இருந்த செல்லத்துரை சில மாதங்களுக்கு முன்பு,கட்சித் தலைமையால் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்துசெல்லத்துரை ஆதரவாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயம் முன் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பைContinue Reading

  ஜுலை,25- ’ஐஸ்க்ரீம் பேபி’என வர்ணிக்கப்படுபவர் நடிகை  தமன்னா. விஜய் தொடங்கி அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்தவர். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இப்போது ரஜினிகாந்த்  நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.அடுத்த மாதம்  10 ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸ் ஆகிறது. தமன்னாவும்,இந்தி நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருவதாக  தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இரவு நேரத்தில்Continue Reading