ஜாமின் கிடைத்தபிறகும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிறையில் உள்ள கைதிகளின் நிலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து  விசாரணை மேற்கொண்டு உள்ளது. இந்த வழக்கில்  உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபி, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலாளர் ஆகியோரை  வழக்கில் உயர்நீதிமன்றம் சேர்த்துக்  கொண்டு இருக்கிறது. ஜாமின் வழங்கப்பட்ட பின்னருஉத்தரவாதத் தொகையை செலுத்த முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 175 கைதிகள் சிறையில் உள்ளதாகContinue Reading

ஆகஸ்டு,08- அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை காரணமாக அவரதுஎம்.பி.பதவி பறிக்கப்பட்டது. அந்த தண்டனைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததால், அவருக்கு மீண்டும் எம்.பி.பதவியை மக்களவை செயலகம் வழங்கியது. இதனை அமேதி மக்களவை தொகுதி காங்கிரசார் கோலாகலமாக கொண்டாடினர். 51 கிலோ எடை கொண்ட லட்டை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர். காங்கிரஸ் கட்சியின் இரும்புக்கோட்டையாக இருந்த அமேதி தொகுதிContinue Reading

ஆகஸ்டு,07- நான்கு திசைகளிலும் அடர்ந்திருக்கும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கி ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. முதல் கூட்டம் கிழக்கு திசையில் உள்ள பாட்னாவில் நடந்தது. இரண்டாம் கூட்டம் தெற்கு திசையில் உள்ள பெங்களூருவில்  நடத்தப்பட்டது. மேற்கு கரையில் உள்ள மும்பையில் மூன்றாவது ஆலோசனை கூட்டம் வரும் 31- ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடக்க உள்ளது. சிவசேனா ( பாலாசாகேப் உத்தவ்Continue Reading

ஆகஸ்டு, 06- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கை அகற்றப்பட்டதாக புகார் கூறப்பட்ட குழந்தை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து விட்டது. ஒன்றரை வயதான தஸ்தகிர் என்ற இந்த குழந்தை கடந்த மாதம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. அப்போது குழந்தையின் கை அழுக ஆரம்பித்ததால் அந்த கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின்Continue Reading

ஆகஸ்டு,05- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேரவை கூட்டம் துணைவேந்தர் ந.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு பணம் இல்லாமல்  திண்டாடுவது குறித்து இந்த கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள், கவலை தெரிவித்தனர். நிதி நெருக்கடியில் பல்கலைகழகம் தத்தளிப்பது குறித்து உறுப்பினர் நாகராஜன் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது: “தமிழகத்திலுள்ள 13 மாநில பல்கலைக்கழகங்களில் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்று. இங்கு 28 துறைகள் செயல்படுகின்றன. . 78 லட்சம்Continue Reading

ஆகஸ்டு, 04- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பொங்கியண்ணன். கோயில் பூசாரியான இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பொங்கியண்ணன்  மனைவி தங்கமணி . விதவையான அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில்,”ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்காவில் பெரிய கருப்பராயன் கோயில் உள்ளது. எனது கணவர் இந்த கோயிலில் பூசாரியாக இருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். தற்போது, இந்தContinue Reading

ஆகஸ்டு.04- பீட்சா’ படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். இதனை தொடர்ந்து டைரக்ட் செய்த ஜிகிர்தண்டா , இறைவி போன்ற படங்களால், கவனம் ஈர்த்தவர். ரஜினிகாந்தின் ரசிகர். அவரை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கினார். அவருக்கும் ,ரஜினிக்கும் பெரிய வெற்றிப்படமாக, ’பேட்ட’ அமைந்தது. இப்போது ‘ஜிகிர்தண்டா’ படத்தின் இரண்டாவது பாகமான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதில்  ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.Continue Reading

ஆகஸ்டு,04- தெலங்கானா மாநிலத்தில்  சில மாதங்களில் சட்டப்பேரவை  தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான,. தெலங்கானா ராஷ்டிர சமிதி , இப்போது, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியாக தேசிய அவதாரம் எடுத்துள்ளது. சந்திரசேகர ராவ் மீது,கடும் அதிருப்தி நிலவுகிறது. ஒவைசி தலைமையிலான ஏ.ஐ,எம்.ஐ.எம். எனும் முஸ்லிம் ஆதரவு கட்சி இவருக்குContinue Reading

(ஏற்கனவே வெளியான செய்தி) ஆகஸ்டு,2- அபின்,கஞ்சா வரிசையில் இப்போது ஸ்மார்ட் போன்களும் புதியதொரு போதைப்பொருளாகி விட்டது. சிறார்களும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி,சதா சர்வ நேரமும் அதிலேயே கிறங்கிக்கிடக்கிறார்கள். சிறார்கள் என இங்கே குறிப்பிடுவது,பள்ளிக்குழந்தைகளை மட்டுமல்ல,ப்ரிகேஜியில் சேர்வதற்கான வயது கூட முதிராத, பிஞ்சு குழந்தகளையும் சேர்த்துத்தான். விழித்து எழுந்ததும், பால் பாட்டில் கூட தேவை இல்லை- கேம்ஸ் விளையாட ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் எனும் நிலைக்கு , ஸ்மார்ட் போன்கள்,Continue Reading

ஆகஸ்டு,1- மணிப்பூர் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் வேதனை தெரிவித்து உள்ளர். அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் மூன்று மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த கலவரத்தின் போது குகி சமூகத்துப் பெண்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற வீடியோ  பத்து நாட்களுக்கு முன் வெளியானது.  அந்தப் பெண்கள் இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் மீதுContinue Reading