மே.30 திருநள்ளாறில் உள்ள உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.Continue Reading