ஏப்ரல்.22 கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். கோவையில் பிரசித்திபெற்ற அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு மகா கணபதி ஹோமம்,சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விமரிசையாகContinue Reading