கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் சித்தராமையா..! துணை முதலமைச்சரானார் டி.கே.சிவகுமார்..!!
2023-05-20
மே.20 கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே.13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டன. அதன்படி, கர்நாடகாவில் இதுவரை இல்லாத வகையில் காங்கிரஸ் 135 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.Continue Reading