திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மிளகாய் பொடி தூவி சுஷாந்த் என்ற நகை வியாபாரியிடம் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கத்தை வழிப்பறி செய்த குற்றவாளிகளை கேரள மாநிலம் மூணாறில் வைத்து தமிழக போலீசார் கைது செய்து உள்ளனர். நெல்லை டவுனில் நகைக் கடை நடத்தி வரும் சுஷாந்த் தமது உதவியாளருடன் கடந்த 30 ம் தேதி அதிகாலை காரில் திருவனந்தபுரத்திற்கு நகை வாங்குவதற்காக புறப்பட்டார். அப்போது நாங்கு நேரி அருகேContinue Reading

ஏப்ரல்.28 நெல்லையில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்காக மாநகர துணை ஆணையர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவதுContinue Reading

ஏப்ரல்.20 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளை காவல்துறையினர் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக அங்கு பணியில் இருந்த ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்ளிட்ட காவல்துறையினர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக, அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்Continue Reading

ஏப்ரல்.19 நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணி நிறைவு செய்யப்பட்ட பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை பயன்பாட்டிற்குத் திறக்க வலியுறுத்தி கடைகளில் கருப்புக்கொடி கட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ. 79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி பணிகள் நிறைவு பெற்றContinue Reading

ஏப்ரல்.18 திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி பல்வீர் சிங்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக பணியாற்றிவந்த பல்வீர் சிங், அப்பகுதியில் சின்ன குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரும்பொழுது, அவர்களின் பற்களை பிடுங்கியும், வாயில் ஜல்லி கற்களை போட்டும் கொடூரமான தண்டனை வழங்கி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சிContinue Reading