கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை குடோன் விபத்தில் 9 பேர் இறப்பு. காரணம் என்னவோ ?
2023-07-29
ஜுலை,29- கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனா். பழைய பேட்டை என்ற இடத்தில் இருந்த குடோனில் ஏராளமான அளவு பட்டாசு இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பட்டாசுகள் இன்று காலை திடீரென வெடித்துச் சிதறியது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குடோன் இருந்ததால் அருகில் இருந்து வீடுகளும் இடிந்து தரைமட்டமானது. காவல் துறையினரும் தீ அணைப்புத் துறையினரும் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.Continue Reading