புதிய நாடாளுமன்றத் திறப்பு – குடியரசுத் தலைவர் திறந்துவைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
2023-05-26
மே.26 தலைநகர் டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள் என பல தரப்பினருக்கும் அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.Continue Reading