ஏப்ரல்.26 உதகையில் கோடை சீசனை முன்னிட்டு 26ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, குன்னூர் – பர்லியார் சாலை மற்றும் கோத்தகிரி சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் உதகையில் கனரக வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.Continue Reading

ஏப்ரல்.24 கோவை – அவிநாசி சாலையில் மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து விமான நிலையத்தை தாண்டி கோல்டுவின்ஸ் பகுதி வரையிலும் 10 கிலோமீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிக்காக மொத்தம் 304 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு இதுவரை 280க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.Continue Reading

ஏப்ரல்.18 கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவித்துள்ளார். கோடை விடுமுறை வருவதால் வரும் நாட்களில் ஊட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் மாவட்டContinue Reading