ஜூன்.1 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் இன்று நேரில் சந்திக்கிறார். அப்போது, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோருவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், மத்திய பாஜக அரசுக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில்Continue Reading

மே.25 இந்தியாவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பிஎல்ஐ எனப்படும் ‘உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 2.75 லட்சம் பேர் வேலை பெற வாய்ப்பு உருவாகியுள்ளது. மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்டுள்ளContinue Reading

மே.21 குடிமைப் பணி தொடர்பான அதிகாரங்கள் டெல்லி அரசின் கைகளிலே இருக்கும் என்ற உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்துவருகிறது. பிரிவு 239ன் கீழ் யூனியன் பிரதேசங்களை குடியரசுத் தலைவர்,Continue Reading

கோவை வேளாண் பல்கலைக்கு அங்கீகாரம்

மே.12 கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ட்ரோன் மூலம் காற்றின்‌ தன்மை குறித்து அளவீடு செய்யும்‌ அமைப்பிற்கான காப்புரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்திறகு ஆளில்லா விமானம்‌ மூலம்‌ மருந்து தெளிக்கும் முறையில் காற்றின்‌ தன்மை குறித்து அளவீடு செய்யும்‌ அமைப்பிற்கான காப்புரிமை மத்திய காப்புரிமை ஒன்றியத்தால்‌ வழங்கப்பட்‌டுள்ளது. ஆளில்லா விமானம்‌ மூலம்‌ பயிர்களை தாக்கும்‌ நோய்‌, களை மற்றும்‌ பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும்‌ முறை தற்சமயம்‌Continue Reading

மே.11 தங்கத்திற்கான ஜி.எஸ்.டி மற்றும் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தால், சவரனுக்கு ரூ.5,000 வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் இருந்துவருகிறது. இதனால், தங்க நகை விற்பனை குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து 47,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த விலை உயர்வைத் தடுக்க என்னContinue Reading

மே.8 நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு தோல்வி பயத்தால் புதுச்சேரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் என்னும் உயிர்க்கொல்லி தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் நீட் தேர்வுக்குContinue Reading

மே.2 நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில், 1,87,035 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாயாக வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வசூலான தொகையைவிட 12 சதவீதம் அதிகமாகும். இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவசூல், முதல் முறையாக ₹1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023 மார்ச் மாதத்தில் மொத்தம் 9 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டதாகவும், இது அதற்கு முந்தைய மாதத்தை விட 11%Continue Reading

கோவை விமானநிலைய விரிவாக்கம் - பிடிஆர் விளக்கம்

ஏப்ரல்.23 கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலத்தின் உரிமையை முழுவதுமாக மத்திய அரசுக்கு மாற்றப்படாது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு தேவையான நிலத்தை குத்தகைக்கு மட்டுமே வழங்கும். முன்பு போல உரிமையை மத்திய அரசுக்கு மாற்றாது. விமான நிலையம் இந்திய விமான நிலையContinue Reading

சத்யபால்மாலிக்கிற்கு சம்மன் -சிபிஐ நடவடிக்கை

ஏப்ரல்.22 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த விவகாரத்தில், அம்மாநில முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டும் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக சத்தியபால் மாலிக் இருந்தபோது, அனில் அம்பானியின் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வழங்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார். ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கியதில்Continue Reading

கொரோனா பரவல் - மத்திய அரசு கடிதம்

ஏப்ரல்.22 தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்திருப்பதாகவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்துவருகிறது. டெல்லி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்குContinue Reading