9 நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். விமானம் ஏறும் முன் சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். அதன்Continue Reading

மே.22 தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நாளை சிங்கப்பூர் செல்கிறார். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, மாநிலத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தொழில்துறையை முன்னெடுத்து செல்வதில் அதிக கவனம் செலுத்திவருகிறார். அதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த இலக்குContinue Reading

மே.22 தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜூன் 20ஆம் தேதி திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக்க கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு. ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் வரும் ஜூன்Continue Reading

மே.19 கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா நாளை பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலைமச்சர் மு.க ஸ்டாலின் பெங்களூரு செல்கிறார். கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, கர்நாடகாவில் அடுத்த புதிய முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், முதலமைச்சராக சித்தராமையாவும், துணைContinue Reading

மே.11 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளதை வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எச். ராஜா பேட்டியளித்தார். அதில், “அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்கிறேன். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்லமாட்டார். முதலமைச்சர்Continue Reading

மே.9 தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை 2021ம் ஆண்டு மே 7-ம் தேதி ஆட்சி அமைத்தது. பதவியேற்ற ஓராண்டுக்குள் அமைச்சரவையில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த வரிசையில், கடந்த டிசம்பர் 14-ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைContinue Reading

மே.8 ஆளுநர் பாராட்டிவிட்டார் என்பதற்காக கொள்கைகளை விட்டு தர மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் த.மோ.அன்பரசன் செங்கோல் வழங்கினார். பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாகContinue Reading

திராவிடம் அனைவரையும் சமமாக நடத்தும் என்று திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க,ஸ்டாலின், ஆளுநரை வைத்து எங்களை அச்சுறுத்த நினைத்தால், அஞ்ச மாட்டோம் என்றும், ஆரியத்தை வீழ்த்தும் ஆயுதம் திராவிடம் என்பதால், அதனைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார் எனவும்Continue Reading

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கி இருப்பதாக ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவி தனியார் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில், அதில், திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. காலாவதியான கொள்கைகளைக் கொண்டு திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சி நடத்துவதாக தெரிவித்து இருந்தார். திராவிட மாடல் கொள்கைகள் ஒரே நாடு ஒரே பாரதம்Continue Reading

அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

மே.3 தமிழகத்தில் மூத்த அமைச்சர்கள் பொதுவெளியில் பேசும்போது விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையிலான பேச்சுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் 7ஆம் தேதியுடன் 2 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்கிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, நிதிநிலைContinue Reading