மே.2 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வருகிற 7-ந் தேதியுடன் 2-ம் ஆண்டை நிறைவு செய்து 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில், முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழக அரசியல் சூழல் மற்றும்Continue Reading

மே.1 தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து, 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடுContinue Reading

ஏப்ரல்.29 கோவையில் மாநகராட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 7அடி உயர முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செக்கு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகளுக்கு அவர் ஆளாக்கப்பட்டார். அவரது தியாகத்தை நினைவு கூறும் வகையில், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.க்கு,Continue Reading

ஏப்ரல்.27 திருவாரூரில் அமைக்கப்பட்டுவரும் கலைஞர் கோட்டம், கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை ஆகியவற்றின் திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே, திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம்Continue Reading

தினமும் 12 மணி நேர வேலை மசோதா மீதான செயலாக்கம் நிறுத்து வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளடு. இந்த மசோதா பற்றி, சென்னை தலைமை செயலகத்தில், இன்று தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில்…Continue Reading

துபாய் தீவிபத்து - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

ஏப்ரல்.18 துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். துபாய் நாட்டின் தேராவின் அல் ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் கடந்த சனிக்கிழமையன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். கட்டிடத்தின் 4-வது மாடியில் ஏற்பட்ட தீ,Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு எச்.ராஜா எச்சரிக்கை

ஏப்ரல்.17 தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருப்பதாகவும், ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் சீருடையுடன் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, தேர்நிலை திடலில் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்) இந்தியா உட்படContinue Reading