ஜூன்.1 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதுஷா நாயகம் தர்ஹாவில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷாகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடத்தப்பட்டுவருகிறது. இந்தாண்டு 849-வது சந்தனக்கூடு திருவிழா மே 21-ம் தேதி மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டுContinue Reading

மே.18 ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து 56 கிராம மக்கள், குடும்பத்தினருடன் 15 நாள் பயணமாக கூட்டு வண்டியில் குலதெய்வக் கோயிலுக்கு புறப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அகத்தாரிருப்பு தாய்கிராமத்திற்கு நேற்று இரவு 56 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களது குடும்பத்தினருடன் வந்து தங்கினர். இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணிக்கு அனைவரும் ஒன்றிணைந்து, கூட்டு வண்டியில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கூடமுடையா அய்யனார்Continue Reading

ஏப்ரல்.27 வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி மோசடி செய்த மாற்றுத்திறனாளி நபர் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். இந்த நிலையில், கடையில் வாங்கிய கோப்பையை கொண்டு, தான் ஆசியகோப்பை வீல்சேர் கிரிக்கெட் போட்டியில்Continue Reading