ஜூன்.3 தமிழகத்தில் இன்றும் (ஜூன்.3) நாளையும் வெப்பநிலை 106 டிகிரி வரை இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் இது தொடர்பாக செய்திக்குறிப்பி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் மேற்கு திசைக் காற்று வீசுவதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் இன்று முதல் 4 நாட்களுக்கு (ஜூன் 3, 4, 5, 6) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இடி,Continue Reading

ஜூன்.2 தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும்Continue Reading

மே.31 தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அக்னிநட்சத்திரத்தால் கடுமையான வெயில் வாட்டியெடுத்தது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்திய நிலையில், அவ்வப்போது பல இடங்களில் மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 30ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தContinue Reading

மே.29 தமிழகத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. கடந்த 25 நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலிலிருந்து விடுதலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் என்றழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதற்கு முன்பாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் அதன் உக்கிரம் மேலும் அதிகரித்தது. இருப்பினும், தமிழகத்தின்Continue Reading

மே.22 வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானதுContinue Reading

மே.20 தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்னி நட்சத்திரத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்துவருகிறது. வேலூர், திருத்தணி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்துகிறது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தContinue Reading

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மே.9 தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ்டுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 05.30Continue Reading

மே.6 தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதனால், அப்பகுதிகளில் மே 7 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், மே 8 ஆம் தேதியில்Continue Reading