திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் தண்டவாளத்தில் தென்னை மரத்தை குறுக்கே போட்டு ரயிலை கவிழ்க்க சதி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் மார்க்கமாக ரயில் இன்ஜின் இரவு நேரத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி ரயில் என்ஜின் ஒன்று சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது திருநின்றவூர்Continue Reading

மே.8 கேரள மாநிலம் மலப்புரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் பயணிகளுன் சுற்றுலா படகு சென்றது. நேற்று மாலை 7 மணியளவில் இந்த படகானது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில்Continue Reading

மே.6 திருப்பூரில் பிரிண்டிங் நிறுவனத்தின் கட்டுமான சுவர் சரிந்து விழுந்த விபத்தில் கட்டிட தொழிலாளி ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் – கொங்கு மெயின் ரோடு, கந்தசாமி லே அவுட்டை சேர்ந்தவர் முத்துராஜா(வயது40). இவர் தனக்கு சொந்தமான கட்டடத்தில் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்தக் கட்டத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. அதில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ராம்மூர்த்தி(வயது50), பிரவீன்(வயது22) ஆகியோர் வேலைContinue Reading

ஏப்ரல்.28 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா உள்ளிட்ட சிலரிடம் மே முதல் வாரத்தில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவுசெய்துள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலராக இருந்த உதவி ஆணையர் கனகராஜ் உள்ளிட்ட பலரிடம் அண்மையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். மேலும் கொலைContinue Reading

ஏப்ரல்.20 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சென்னை ஆவடி ஆயுதபடை உதவி ஆணையர் கனகராஜிடம் கோவை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள பங்களாவில் கடந்தContinue Reading

ஏப்ரல்.19 கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது58). கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி பேரூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இவருக்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்தContinue Reading

காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனத்தின் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள், ஆட்கள் வந்ததைக் கண்டு தப்பியோடினர். காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் தனியார் நிறுவனமான இண்டிகேஷ்(INDICASH) என்கிற ஏடிஎம் மையமானது அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரு ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அப்போது, அப்பகுதியில் ஆள்Continue Reading