ஏப்ரல்.15 தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் விசைப்படகுகள், இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, குறிப்பிட்ட தடைக்காலத்தில்Continue Reading