ஜுலை,21- எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை  தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவருமே , எந்த பிரச்சினையிலும் வாய் திறப்பதில்லை. எடப்பாடி பழனிசாமியின் கைக்கு அதிமுக வந்தபின், மாஜிக்கள், மாவட்டங்கள் என எல்லோருமே பொளந்து கட்டுகிறார்கள்.பலரின் பிதற்றல்களும்,உளறல்களும் பொடியன்கள் கூட பரிகாசம் செய்யும் அளவுக்கு எல்லை மீறி போய் விடுகிறது. சம்மந்தமில்லாமலும், சர்ச்சையாகவும் பேசுவதில் இன்றைக்கு அதிமுகவில் நம்பர் -1 ஆக இருப்பது திண்டுக்கல் சீனிவாசன்.Continue Reading

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதுதான் அதிமுக என்பதை தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் இதோ போன்று அந்தக் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பெயரும் பதியப்பட்டு இருக்கிறது.  இதனால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இனி அதிமுக என்று அதிகாரப்பூர்வமாக சொல்லிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல்Continue Reading

மக்களவை தேர்தலோ, சட்டப்பேரவை தேர்தலோ வருவதற்கு முன்பாக பிரதான அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தி தங்கள் வலிமையை வெளிச்சம் போட்டு காட்டுவது வழக்கம். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் மதுரையில் மாநாடு நடத்தி ‘மாஸ்’ காட்ட முடிவு செய்துள்ளது, அ.தி.மு.க. இந்த மாநாடு மதுரை விமானநிலையம் அருகே கருப்புசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமிContinue Reading

ஜூன் – 27 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை எனச் சொல்லப்படுவதாக பிரேமலதா விஜயகாந்த் திடுக்கிடும் தகவல் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவைContinue Reading

June 21, 23 அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழல், முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள்Continue Reading

June 20, 23 நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் கனியுமா? அல்லது காயாகுமா? என்பதை காலம் கணித்து சொல்ல வேண்டும் என்று  கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார். நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்றிருந்த கவிப்பேரரசு வைரமுத்து  கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த குறிப்பேட்டில்,  “நமக்கு நாமே பயணத்தினை தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்தினை பெற்று தொடங்கிய மு.க.ஸ்டாலினின்Continue Reading

June 20, 23 அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையில், சாலை வரியை உயர்த்த திமுக அரசு முடிவெடுத்து உள்ளது கண்டனத்திற்க்கு உரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள  அறிக்கை வருமாறு, “‘விடியல் தருவோம்’ என்று கூறி ஆட்சியைப் பிடித்த விடியா திமுக அரசு, சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்துவதற்கு முடிவெடுத்துள்ளதாக அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ள செய்தி,Continue Reading

June 15, 23 திமுக எம்பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூலை 14-ம் தேதி நேரில் ஆஜராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி, திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம்Continue Reading

June 15,23 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான எண் 1440 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று முன்தினம் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்துContinue Reading

Junen 15, 23 ”நெஞ்சுவலி எனக்கூறியும் அதிகாரிகள் கீழே தள்ளி கைது செய்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்” என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்துContinue Reading