கர்நாடக தேர்தல் - வேட்பாளரை அறிவித்த ஓ.பி.எஸ்

ஏப்ரல்.20 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி தொகுதியில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் டி.அன்பரசனை வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 10-ந்தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறுது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜக இடையே நேரடிப்போட்டி நிலவும் நிலையில், தேர்தலுக்கான வேட்புமனுContinue Reading

அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் - தேர்தல் ஆணையம்

ஏப்ரல் 19 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 10.05.2023 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் புலிகேசி நகர்Continue Reading

ஏப்ரல் 16 சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறும், 2 கோடிContinue Reading

சென்னையில் வரும் 16ம் தேதி நடைபெறும் அதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டContinue Reading

சென்னை ராயபுரத்தில் நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார், “தி.மு.க ஆட்சியில் கருத்துரிமை முழுக்கப் பறிக்கப்பட்டிருக்கிறது. பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவது லைவில் வருவதில்லை. ஏனென்றால், அங்கு சட்டமன்றம் நடக்கவில்லை. ஸ்டாலின் தர்பார்தான் நடந்துகொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குக்கூட பக்குவமின்றி கேலியும், கிண்டலுமாகத்தான் பதிலளிக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.Continue Reading

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் தனியார் பள்ளியொன்றில் 5 வயது சிறுமி ஒருவர், அந்தப் பள்ளியின் தாளாளரும், தி.மு.க நகர்மன்ற உறுப்பினருமான பக்கிரிசாமி என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று வயிற்றுவலி எனப் பெற்றோர்களிடம் கூறியதையடுத்து, சிறுமியைப் பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கின்றனர். அப்போது, சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். இந்தContinue Reading

”அண்டை மாநிலத்திலிருந்து விதவிதமாகப் போதைப்பொருள்கள் விற்பனை செய்யக்கூடிய கேந்திரமாக புதுச்சேரி மாறியிருக்கிறது”- புதுச்சேரி அ.தி.மு.க புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மாநிலம் முழுக்க முழுக்க இரவு நேர மதுபான பார்கள், ரெஸ்டோ பார்கள், கடைகள் திறந்திருப்பதால் சட்டம் – ஒழுங்கு முழுமையாகச் சீர்கெட்டுக் கிடக்கிறது. மதுபான பார்களும், ரெஸ்டோ பார்களும் இரவுContinue Reading

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுவக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பதவிகள் நீக்கப்பட்டு, மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதன்படி, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடிContinue Reading

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13இல் மேற்கொள்ளப்பட்டுContinue Reading

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பல வகையான கருத்துகளை வெளியிட்டதால் அண்மைக்காலமாக இரு தரப்பினரிடையே பிரச்சனை இருந்துவருகிறது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “2024 மக்களவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை பேசி முடிவு செய்ய வேண்டியContinue Reading