ஏப்ரல் 16 மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ. 2.08 கோடி மதிப்புடைய 3.4 கிலோ தங்கம், ஐ ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பயணிகளை, சுங்கத்துறை கைது செய்து விசாரணைContinue Reading

துபாயில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த அரியலூரை சேர்ந்த பயணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2Continue Reading

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். தமிழகத்தில் சென்னை- கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். பின்னர், மைசூர் திரும்புவதற்கான சென்னை விமானநிலையத்திற்கு சென்ற மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சந்தித்து 20 நிமிடங்கள் வரை பேசினார். அப்போது,Continue Reading

சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த 41 வயதான ஆண் ஒருவருக்கு அங்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ,மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கோவையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைContinue Reading

பூடான் நாட்டின் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடியுடன் இன்று பூடான் மன்னர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். நேற்று இந்தியா வந்த பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக்-விற்கு டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சிறப்பான வரவேற்பு அளித்தார். இதைத் தொடர்ந்து, பூடான் மன்னருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்Continue Reading

கோவை விமான நிலையத்தில் விமானம் மூலம் சரக்குகளை அனுப்புவதற்கான கட்டணம் மற்ற விமான நிலையங்களைவிட அதிகமாக இருப்பதால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு நாள்தோறும் விமான சேவை வழங்கப்பட்டுவருகிறது. தினமும் இரவு 7.45 மணியளவில் கோவையில் தரையிறங்கும் விமானம், மீண்டும் 8.45 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்கிறது. தினமும் பயணிகள் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இயக்கப்படும் இந்த விமானத்தில், சரக்குகள் மட்டும் மிக குறைந்த அளவேContinue Reading