ராகுல்காந்தி 4 அறிவிப்புகள்

ஏப்ரல்.17 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, 200 யூனிஸ்ட் மின்சாரம், இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும் என ராகுல்காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார். கர்நாடாகவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. இந்நிலையில், இந்தத் தேர்தல் ராகுல்காந்தி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைContinue Reading

தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை மக்கள் சிரமமின்றி கொண்டாடும் வகையில், 500 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சித்திரை 1ம் தேதி நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை தினம் என்பதால், வெளியூர்களில் வேலை நிமித்தமாக வசிப்போர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ஒரே நேரத்தில் பலContinue Reading

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று முதல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில், திங்கள்கிழமை முதல் விசாரணை நடைபெறும். ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள்,Continue Reading

தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொதுமக்கள் பயணத்திற்கு என்று பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், உலகத் தரத்தில் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை விரைவில் கொண்டுவரப்படவுள்ளது. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் கிராம மற்றும் நகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சேவை அமையவுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசியContinue Reading

சென்னையில் வரும் 16ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், செயற்குழு கூட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்தும், கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும், அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16-ம் ஞாயிற்றுக்கிழமை பகல்Continue Reading

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுகவில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக-வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,Continue Reading