June 20, 23 அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு நாளை ( புதன் கிழமை)  விசாரணைக்கு வரவுள்ள  நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களின் பேரில்  அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த வாரம் கைது செய்தது. நீதிமன்றக் காவலில் உள்ள அவருக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறவும்  நீதிமன்றம்Continue Reading

June 15,23 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான எண் 1440 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று முன்தினம் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்துContinue Reading

Junen 15, 23 ”நெஞ்சுவலி எனக்கூறியும் அதிகாரிகள் கீழே தள்ளி கைது செய்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்” என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்துContinue Reading

June 15, 23 நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோயில் காசிக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி சமூக வலைத்தளங்களில் ஏமாற்றி வந்தவர், நாகர்கோயில் காசி. இவர், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார். ஏமாந்த பெண்களிடம் பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவதாக மிரட்டிContinue Reading

ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டுத் தாக்குதல்

ஏப்ரல்.15 ஜப்பான் நாட்டின் வயகமா பகுதியில் பிரதமர் புமியோ கிஷிடா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் திடீரென பைப் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பிரதமர் கிஷிடா காயங்களின்றி உயிர்தப்பினார். தென்மேற்கு ஜப்பானில் உள்ள வயகமா மீன்பிடித் துறைமுகத்தை அந்நாட்டுப் பிரதமர் புமியோ கிஷிடா சுற்றிப்பார்த்தார்.பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவரை உரை நிகழ்த்த தொடங்கினார். அப்போது, திடீரென பிரதமரை குறிவைத்து ஒரு நபர்Continue Reading

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாநிலத்திலேயே இல்லாத வகையில் அதிக சொத்துவரியை உயர்த்தியுள்ள நகராட்சியைக் கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியினர் பெண்கள் உட்பட சுமார் 200.க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் எனContinue Reading

நீலகிரி மாவட்டம் உதகையில் திருடிய நகைகளை பங்கு போட்டு கொள்வதில் திருடர்கள் இருவரிடையே பட்டப்பகலில் ஏற்பட்ட சண்டையால், இருவரும் போலீசரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உதகை நகரின் மைய பகுதியில் உள்ள திமுக அறிவாலயம் அருகே மதியம் 2 நபர்கள் மதுபோதையில் நகைகளை கையில் வைத்து கொண்டு பங்குபோட சண்டையிட்டு கொண்டிருந்தனர். அது குறித்து தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்த உதகை B1 காவல்துறையினர் இருவரையும் பிடித்துContinue Reading

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக மாணவிகளிடம் மாநில மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை நடத்திவருகிறது. மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாஷேத்ரா நிறுவனம் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி சென்னை திருவான்மியூரில் செயல்பட்டுவருகிறது. இங்கு பணியாற்றும் 4 ஊழியர்கள், பாலியல் தொல்லை தருவதாக குற்றம்சாட்டிய மாணவிகள், கடந்த 2 வாரங்களுக்கு முன்புContinue Reading

கன்னியாகுமரியில் பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியர் ஆன்டோ மீது இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனட்டிக் ஆன்டோ (வயது 29). இவர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்தார். இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்குContinue Reading

நாகர்கோயிலில் பாஜகவினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பாஜகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, இளைஞர் காங்கிரஸார் நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாஜக அலுவலகத்தில் இருந்த மாவட்டத் தலைவர் தர்மராஜன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர்Continue Reading