தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் உச்சம் தொட்டவர்கள் மூன்று பேர்.‘மச்சானப்பாத்தீங்களா?’ என அன்னக்கிளியில் ஆரம்பித்த இளையராஜாவின் இசைப்பயணம் ஆயிரம் படங்களை தாண்டி  அவரை ஓட வைத்துக்கொண்டிருக்கிறது. ரோஜா  படத்தின் ’சின்ன சின்ன ஆசை’ மூலம் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆஸ்கர் வரை உயர்ந்தார். நடிகர் ராகவேந்தரின் மகனான அனிருத், “3” படம் மூலமாக 21 வயதில் சினிமாவுக்கு வந்தார்.ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமும் அதுதான் தனுஷ்-Continue Reading

கதாநாயகர்களின் பிம்பத்தை கட்டமைப்பதில் தூண்களாக இருப்பவர்கள் வில்லன்கள். சினிமாக்களில் எதிர்மறை கதாபாத்திரங்களின் வலிமையும், கொடுமையும்தான், ஹீரோக்களை,ரசிகர்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு செல்கிறது. எம்.ஜி.ஆருக்கு நம்பியார். ரஜினிக்கு ரகுவரன். அதுபோல் பிரகாஷ்ராஜ், பல நாயகன்களின் வெற்றிக்கும், படங்களின் வசூலுக்கும் பிரதான காரணமாக இருந்துள்ளார். அந்த படங்கள் குறித்த சின்ன தொகுப்பு: ஆசை. கே.பாலசந்தரின் மாணவரான வசந்த், வணிக ரீதியாக கொடுத்த பெரிய வெற்றிப்படம் ஆசை. அஜித்தை, உச்சத்துக்கு உயர்த்திய படமும் இதுவே.Continue Reading

தமிழர் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் கவியரசர் கண்ணதாசனின் 96 ஆவது பிறந்தநாள், இன்று. எழுத்தாளர்,கவிஞர்,பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர்,மேடைப்பேச்சாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர்,கண்ணதாசன். சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியை சேர்ந்த சாத்தப்பா- விசாலாட்சி தம்பதியின் எட்டாவது குழந்தை கண்ணதாசன். சிறு வயதிலேயே பழனியப்பன் -சிகப்பி தம்பதிக்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு தத்து கொடுக்கப்பட்ட அவர், பெற்றோர் தனக்கு சூட்டிய முத்தையா எனும் பெயரை பிற்காலத்தில் கண்ணதாசன் என தத்தெடுத்துக்கொண்டார். பிஞ்சுContinue Reading

இயக்குநர்களுக்கு உச்ச நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பு.அதனை சரியாக பயன்படுத்தியவர்கள், புகழோடு காசும் பார்த்து விடுகிறார்கள். தவற விட்டோர், சுலபாக மீள்வதில்லை. இந்த பட்டியலில் இடம் பெறுவோரில் முக்கியமானவர் வசந்த். கே.பாலசந்தரின் மாணவர். கேளடி கண்மணி, ஆசை ஆகிய அற்புதமான சினிமாக்களை தந்தவர். பாலசந்தர் தயாரிக்க ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தை இயக்கும் வாய்ப்பு முதலில் வசந்தைத்தான் தேடி வந்தது. பத்திரிகைகளில் விளம்பரமும் வந்து விட்டது. ரஜினியுடன் ஏற்பட்டContinue Reading