Junen 15, 23 ”நெஞ்சுவலி எனக்கூறியும் அதிகாரிகள் கீழே தள்ளி கைது செய்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்” என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்துContinue Reading

June 15, 23 அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1000 படுக்கைகளுடன் ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை’ கட்டப்பட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் சுமார் 51,429Continue Reading

June 15, 23 அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பினாமி சொத்துகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம்தான் ஹாட் நியூஸாக மாறியுள்ளது. தற்போது நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, அறுவைContinue Reading

June 14, 23 செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது வழக்கறிஞர்கள் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு வாதிட்டனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றவியல் சட்டம் பொருந்தாது, செந்தில் பாலாஜி தான் கைதாவார் என்று தெரிந்தே, மெமோவை வாங்க மறுத்துவிட்டார். அவரதுContinue Reading

June 14, 23 சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாகContinue Reading

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 6-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.Continue Reading

தமிழகத்தில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை ஒரு மாத காலத்தில் ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் பாமக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 6188 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து செயல்பட தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்Continue Reading

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவரவுள்ளார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இதற்கிடையே ஒரு மசோதாவை நிறுத்தி வைத்திருந்தாலே அது நிராகரிப்பதாக தான் பொருள் என ஆளுநர் அண்மையில் பேசிய பேச்சு கடும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை 3 நாள் விடுமுறைக்குப் பிறகு கூடவுள்ளது. அதில், ஆளுநருக்கு மத்தியContinue Reading

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாததைக் கண்டித்து நூதன போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாள் முழுவதும் பசுவிடமிருந்து பாலைக் கறக்காமல் கன்றுக்கு மட்டும் கொடுத்து நூதன போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய விவசாயிகள், விவசாயம் சார்ந்த உபதொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காத போது கால்நடை வளர்ப்பு கைகொடுக்கும். ஆனால், சமீபContinue Reading

இந்தியாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சேர்க்கைகாக நடத்தப்படும் கணினித் தேர்வை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9,212 காவலர்கள் ஆட்சேர்க்கைக்கான அறிவிக்கை தொடர்பாகத் தங்களது கனிவான கவனத்தைக் கோருகிறேன். நமது அரசமைப்புச்Continue Reading