கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கோவிலின் உள்ளே வழிபடச் செல்லும், தான் அணிந்திருந்த காலணியை கழட்டி, உதவியாளரிடம் கொடுத்து எடுத்துச் செல்லக்கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற 18ஆம் தேதி சாகை வார்த்தை நிகழ்ச்சியுடன் தொடங்கவுள்ளது. மே மாதம் 2ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியானContinue Reading

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று முதல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில், திங்கள்கிழமை முதல் விசாரணை நடைபெறும். ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள்,Continue Reading

நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் 2ம் கட்ட அகழாய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார். தொல்லியல் துறை சார்பாக 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி கிராமமும் அடங்கும். ராதாபுரம் தாலுகாவில் உள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இந்த தொல்லியல் மேடானது விளாங்காடு என்றழைக்கப்படுகிறது. இவ்வாழ்வியல் மேடானது, சுமார் 2.5 மீContinue Reading

கோவை விமான நிலையத்தில் விமானம் மூலம் சரக்குகளை அனுப்புவதற்கான கட்டணம் மற்ற விமான நிலையங்களைவிட அதிகமாக இருப்பதால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு நாள்தோறும் விமான சேவை வழங்கப்பட்டுவருகிறது. தினமும் இரவு 7.45 மணியளவில் கோவையில் தரையிறங்கும் விமானம், மீண்டும் 8.45 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்கிறது. தினமும் பயணிகள் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இயக்கப்படும் இந்த விமானத்தில், சரக்குகள் மட்டும் மிக குறைந்த அளவேContinue Reading

கோவையில் உலக ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர். கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லூரி அரங்கில் உலக ஆட்டிசம் தினத்தையொட்டி, ஆட்டிசம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கௌமார பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட ஆட்டிசம் குறைபாடுடைய சிறப்பு குழந்தைகள்Continue Reading