மோடி என்னை பாராட்டி பேசிய பிறகு என்னை பா.ஜ.க.வின் ஏஜெண்ட் என்று சிலர் அழைத்தது எனக்கு அவமானகரமானது என்று முன்னாள் காங்கிரஸ்காரரும், மூத்த அரசியல்வாதியுமான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். முன்னாள் காங்கிரஸ்காரரும், மூத்த அரசியல்வாதியுமான குலாம் நபி ஆசாத், நேற்று தனது சுயசரிதையான ஆசாத் புத்தக வெளியீட்டு விழாவையொட்டி செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி அளித்தார். அப்போது குலாம் நபி ஆசாத் கூறியதாவது: பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக பிரதமர்Continue Reading

இந்தியாவில் வாய்மொழி அவதூறு வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்த மோடி அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராம் தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும்Continue Reading

கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ்மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, “எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?” என கூறியிருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவைContinue Reading

2024 நாடாளுமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் காங்கிரஸூக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கணித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் பேட்டி ஒன்றில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் நான் இருந்திருந்தால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் சிறிய கட்சிகளை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்க ஊக்குவித்திருப்பேன். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான புதிய காரணத்தை கண்டுபிடித்துContinue Reading

கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 104 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 80 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகளிடேயேதான் பிரதான போட்டி உள்ளது. இந்நிலையில்Continue Reading