June 17, 23 தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும்Continue Reading

ஜுன் 16… கடந்த காலங்களில் திமுக எத்தனை முறை சிபிஜ விசாரணை கேட்டு உள்ளது என்பதை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் திமுகவை யாரும் சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலளித்து அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கை கொஞ்சம் சூடாகவே உள்ளது..படியுங்கள்.. “தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது. கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல்Continue Reading

June 15,23 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான எண் 1440 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று முன்தினம் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்துContinue Reading

Junen 15, 23 ”நெஞ்சுவலி எனக்கூறியும் அதிகாரிகள் கீழே தள்ளி கைது செய்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்” என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்துContinue Reading

June 15, 23 அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1000 படுக்கைகளுடன் ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை’ கட்டப்பட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் சுமார் 51,429Continue Reading

June 15, 23 அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பினாமி சொத்துகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம்தான் ஹாட் நியூஸாக மாறியுள்ளது. தற்போது நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, அறுவைContinue Reading

June 14, 23 செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது வழக்கறிஞர்கள் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு வாதிட்டனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றவியல் சட்டம் பொருந்தாது, செந்தில் பாலாஜி தான் கைதாவார் என்று தெரிந்தே, மெமோவை வாங்க மறுத்துவிட்டார். அவரதுContinue Reading

June 14, 23 பாஜகவின் கிளை அமைப்புகள் போலவே அமலாக்கத்துறை செயல்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்தவிதமான விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அமலாக்கத்துறையினர் தங்களின் எஜமானார்களான மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை திருப்திப்படுத்தியுள்ளனர். திமுகவை மட்டுமின்றி அதிமுகவையும் மிரட்ட விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது. கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என அதிமுக கூறியதால் உங்களையும் கைது செய்வோம் எனContinue Reading

June 14, 23 சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாகContinue Reading

June 14, 23 சென்னை: “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பாஜக.,வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் விவரம் வருமாறு: தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல்Continue Reading