ஏப்ரல்.26 கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி வருகிற 29-ந் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். அகில இந்திய காங்கிரஸ்Continue Reading

ஏப்ரல்.20 கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. கர்நாடகாவில் வரும் மே 25ஆம் தேதி உடன் மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைகிறது. மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 5,21,73,579 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 58,282 வாக்குச்சாவடிகள் மூலம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இது தொடர்பாக கடந்த மார்ச்Continue Reading

ஏப்ரல்.17 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, 200 யூனிஸ்ட் மின்சாரம், இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும் என ராகுல்காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார். கர்நாடாகவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. இந்நிலையில், இந்தத் தேர்தல் ராகுல்காந்தி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைContinue Reading