சுற்றுலாப் பயணிகளைத் துரத்திய காட்டுயானை

ஏப்ரல்.23 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலையை கடக்க முயன்ற யானையை படம்பிடிக்க முயன்றவர்களை, அந்த யானை துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர்,செம்மனாரை உள்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. வழக்கமாக இந்த மரங்களில் கோடை காலத்தில் பழங்கள் காய்த்து குலுங்குவது போல இந்த ஆண்டும் காய்த்துள்ளது. இதனால் காட்டுContinue Reading

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி வன பகுதிக்குள் சுற்றத்திரிந்த தும்பிக்கை இல்லாத யானைக்குட்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் சேர்ந்தது. இது தொடர்பாக கேரள வனத்துறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது. திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தும்பிக்கை இல்லாமல் குட்டியானை ஒன்று சுற்றுலா பயணிகளால் புகைப்படம் எடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.Continue Reading

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் பாகுபாலி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராமம் மேட்டுப்பாளையம்-வனப்பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ளது. இந்நிலையில், அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதியிலிருந்து தினமும் உணவு, குடிநீர் தேடி காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்டContinue Reading

நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திரமோடி, ஆஸ்கார் நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து, 50-வது ஆண்டு பொன்விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி மைசூருக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாகContinue Reading

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை மறுநாள் (ஏப்.9) பிரதமர் நரேந்திர வருவதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புலிகள் பாதுகாப்பு திட்டம்தொடங்கியதன் 50-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக வருகின்ற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குச் செல்கிறார். அதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் அவர் வரவுள்ளார். அதன்படி, வரும் 9-ந்தேதி காலை 9.35 மணிக்குContinue Reading