கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு இரண்டாவது நாளாக குவிந்த சுற்றுலாப் பயணிகள் வருகையால் போக்குவரத்து முடங்கியது. கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக பரவலாக தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் குளுமையான சீதோஷ்ன நிலை ஏற்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலா இடங்களான வெள்ளிநீர் வீழ்ச்சி,பில்லர் ராக்,மோயர் பாயிண்ட்,ரோஜாத் தோட்டம்,தாவரவியல்Continue Reading

கோவை மாவட்டத்தில் உள்ள கோவைக் குற்றாலத்தில் கொளுத்தும் கோடையைச் சமாளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து, அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். பல மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டிக் கொளுத்தும் வெப்பத்தால் குழந்தைகள், முதியவர்கள் என பல தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். கோடையின் கொடுமையிலிருந்துContinue Reading