நாடு முழுவதும் அதிகரித்துவரும் கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் தொற்று பாதித்த 25,587 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர்களில் 2,826 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் குறைந்த தொற்று எண்ணிக்கை தற்போது மீண்டும்Continue Reading

அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. அந்தப் பகுதியை தனக்கு சொந்தமானது என்று தொடர்ந்து கூறி வருகிது சீனா. அதுமட்டுமல்லாமல் எல்லைப் பகுதியில் சில இடங்களையும் ஆக்கிரமித்து, அந்தப்பகுதிகளில் பல்வேறு கட்டுமானங்களை நிறுவி வருகிறது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஊர்களின் பெயர்களை மாற்றும் செயலை மீண்டும் செய்துள்ளது சீனா. இதுபோல பெயர் மாற்றும் வேலைகளை கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து சீனாContinue Reading

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட தொற்று 5,000 ஐ கடந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொற்றுக்கு 25,587 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 2,826 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் குறைந்த தொற்று எண்ணிக்கை தற்போதுContinue Reading

இலங்கை, நியூசிலாந்து அணிகள் இடையாயன 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3வது மற்றும் கடைசிப் போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து 2Continue Reading

இந்தியாவில் இனி சிறு சேமிப்பு திட்ட கணக்குகளுக்கும் ஆதார் மற்றும் பான் எண்களை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில், இந்த ஆதார் எண்ணைப் பிற அடையாள அட்டைகளுடன் இணைப்பதற்கு மத்திய அரசு வழிவகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிறு சேமிப்பு திட்டக் கணக்குகளுக்கு ஆதார் எண் மற்றும்Continue Reading

வருமான வரிச் சட்டத்தில் ரெய்டு என்பது இல்லையென்றும், வரி ஏய்ப்பு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் சோதனை மேற்கொள்ள வருமான வரிச்சட்டத்தில் அதிகாரம் உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வருமான வரித் துறை நடத்திய ரெய்டுகளின் விவரங்கள் அப்போது கைப்பற்றபட்ட ரொக்கம் போன்ற தகவல்களைக் கேட்டு விரிவான கேள்வியை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு மக்களவையில் எழுப்பி இருந்தார்.Continue Reading

காசியில் நடைபெற்ற தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவையை சேர்ந்த துளசி அம்மாளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டின் பன்முகத்தை காக்க இத்தகைய ஒற்றுமை உணர்வு ஊக்குவிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி காசியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க, தமிழகத்தின் 12 இடங்களிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 2,500 பேர் ஆன்லைனில் பதிவு செய்துContinue Reading

உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் தரைவரிசைப் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம், உலகின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தியா உட்பட உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இந்நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது.Continue Reading

பூடான் நாட்டின் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடியுடன் இன்று பூடான் மன்னர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். நேற்று இந்தியா வந்த பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக்-விற்கு டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சிறப்பான வரவேற்பு அளித்தார். இதைத் தொடர்ந்து, பூடான் மன்னருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்Continue Reading

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மணப்பாறை முறுக்கு, ஊட்டி வரிக்கி, நெகமம் காட்டன் சேலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவி சார் குறியீடு கிடைத்துள்ளதாக அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புவிசார் குறியீடு சட்டம் 2003-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதுவரை, இந்தியாவில் 435 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில்Continue Reading