கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி வன பகுதிக்குள் சுற்றத்திரிந்த தும்பிக்கை இல்லாத யானைக்குட்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் சேர்ந்தது. இது தொடர்பாக கேரள வனத்துறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது. திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தும்பிக்கை இல்லாமல் குட்டியானை ஒன்று சுற்றுலா பயணிகளால் புகைப்படம் எடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.Continue Reading

கேரளா மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, எம்.பி. பதவி, வீடு, அடையாளம் ஆகியவற்றை வேண்டுமானால் பாஜக எடுத்துக்கொள்ளலாம், சிறையில் அடைக்கலாம் ஆனால் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார். பிரதமர் நரேந்திரமோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு அண்மையில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிContinue Reading

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பீட்ரூட் கிழங்குகள் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்த பீட்ரூட், தற்போது சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் பீட்ரூட்டை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு வசதியாக வெவ்வேறு காலங்களில்Continue Reading

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வனத்துறை அலுவலகப் பெண் பணியாளரின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பைக்கில் வந்த நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட மானந்த வாடி பகுதியில் உள்ள சாலையில் அதே பகுதியை சேர்ந்த ரோஸ்லின் ஜோசப் என்ற இளம் பெண் ஆனந்தவாடி வனத்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.Continue Reading

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பெய்த கனமழையினால், புதிதாகப் போடப்பட்ட சாலையில் வந்த இருசக்கர வாகனங்கள் வழுக்கி அடுத்தடுத்து விழுந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாலுசேரி என்னும் நகர பகுதியை இணைக்கும் கக்கோடி கிராம சாலை அண்மையில் புதிதாக சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பகுதியில் மழை பெய்து வந்தது. அப்போது அந்த சாலை வழியாக இருசக்கரContinue Reading

தென்காசியிலிருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக கனிமளவங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், புளியரை சோதனை சாவடியில் சிறப்பு தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இருப்பினும், விதிகளை மீறி சட்டவிரோதமாக, ஏராளமான லாரிகளில் தென்காசி மாவட்டத்திலிருந்துContinue Reading

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கேரளாவிலிருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து சுற்றுலா பேருந்தில் 51 பேர் வேளாங்கண்ணி குருத்தோலை விழாவில் பங்கேற்க சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் பகுதியில் சென்றபோது, சாலையின் வளைவில் உள்ள பக்கவாட்டு தடுப்பு சுவரில் மோதிய பேருந்து கவிழ்ந்துContinue Reading